பக்கம்:பவள மல்லிகை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோடி மரப்பாச்சி 113

பக்கத்தில் பக்கத்தில் இருந்தன. இரண்டு குடும்பத்தின ரும் பத்துக்கள். சின்ன வயசு முதற்கொண்டே இரண்டு குடும்பத்துக் குழந்தைகளும் பழகிவந்தன. அப்பா பெரிய குழந்தையாக இருந்தாலும் விளையாடுவதில் அதிக ஆசையாம். ஒரு நாள் இரண்டு வீட்டுக்காரர்களும் மரப் பாச்சி வாங்கினர்கள். ஒரு ஜோடி மாப்பாச்சியை வியா பாரி கொண்டுவந்திருத்தான். ஆண் பொம்மையை எங்கள் அப்பா வீட்டில் வாங்கினர்கள். பெண் பொம்மையை அம்மா வீட்டில் வாங்கினர்கள். இரண்டு குழந்தைகளும் அந்த மரப்பாச்சிகளை வைத்து விளையாடினர்கள். இரண் டையும் வைத்துக் கல்யாணம் செய்வது, விருந்து வைப் பது இப்படியாக விளையாடினர்கள்.

ஒரு நாள் என்ன தோன்றிற்ருே என்னவோ, இரண்டு குழந்தைகளும் மரப்பாச்சியை மாற்றிக்கொன் டார்கள். ஆண் பொம்மையை அம்மா வாங்கிக்கொண் டாள். பெண் பொம்மை அப்பாவிடம் போயிற்று. ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே: எங்கள் அம்மாவைப் பெற்ற ஒரு வருஷத்தில் பாட்டி காலமாகிவிட்டாள். ஆகவே தாத்தா இரண்டாந்தாரம் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அம்மாவிடம் அந்தச் சித்திக்கு அவ்வளவு பிரியம் என்று சொல்ல முடியாது. ஒரு நாள் அந்தச் சித்திப் பாட்டி அம்மாவைக் கூப்பிட்டிருக்கிருள். அம்மா, மரப்பாச்சியை வைத்துக் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள்.இரண்டு. மூன்று முறை கூப்பிட்டும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த குழந்தையின்மேல் சித்திக்குக் கோபம் வந்தது. ஏதோ அடுப்பில் காரியமாக இருந்தவள், வந்தாள். நறுக்கென்று அம்மா தலையில் ஒரு குட்டுக் குட்டிவிட்டு, அந்த மாப்பாச்சி யைப் பிடுங்கிக்கொண்டுபோளுள், அதை என்னசெய்தாள்

தெரியுமோ? அப்படியே அடுப்பில் வைத்துவிட்டாள்.

8 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/119&oldid=592226" இலிருந்து மீள்விக்கப்பட்டது