பக்கம்:பவள மல்லிகை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பவள மல்லிகை

  • ஐயோ! அடுத்த வீட்டு மாப்பாச்சி !’ என்று குழந்தை கத்தினுள். சித்தி அதைக் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. தற்செயலாக ஒரு பாட்டி அப்போது வீட்டுக்குள் வந்தாள். குழந்தை அழுவதைப் பார்த்துவிட்டு உள்ளே போனுள். மாப்பாச்சி அடுப்பில் இருப்பதைப் பார்த்தாள். -

" அடி பாவி என்ன காரியம் செய்துவிட்டாய் ! மரப்பாச்சியை அடுப்பில் வைப்பார்களோ ? உனக்குக் குழந்தை குட்டி பிறக்கவேண்டும் என்ற எண்ணமே இல் லேயோ?” என்று சொல்லி அதைப் பிடுங்கித் தண்ணிரைக் கொட்டி அவித்தாள். மரப்பாச்சியின் அடிப்பாகந்தான் எரிந்தது. அந்தப் பக்கத்தை அடுப்பிலே வைத்திருந்த தஞல், நல்ல வேளையாக முகம் தீப்படவில்லை.

“ இனிமேல் இந்த மாதிரி காரியம் செய்யாதே. உயி ருடன் குழந்தையைக் கொளுத்துவதும் சரி; மாப்பாச் சியை எரிப்பதும் சரி' என்ற சொல்லிவிட்டுப் போனுள் பாட்டி.

அது முதல் சித்திக்குப் பயம் பிடித்துக்கொண்டது. தான் செய்த அசட்டுக் காரியத்தால் என்ன கெட்ட பலன் உண்டாகுமோ என்று அஞ்சினுள். பாட்டி சொன்னது போலக் குழந்தை குட்டி பிறக்காமல் போய்விட்டால்-? அவள் மனசு தவியாய்த் தவித்தது. அந்த மாப்பாச்சியைப் பார்த்தாள். என் அம்மா மூலையில் விக்கி விக்கி அழுது கொண்டிருப்பதையும் கவனித்தாள். மாப்பாச்சியை கன்முகத் தேய்த்து அலம்பி அம்மாவிடம் கொடுத்து, * அழாதே அம்மா, கூப்பிட்டால் உடனே வரவேண் டாமோ ? அதனுல்தான் சித்தி கோபித்துக்கொண்டாள். இனிமேல் கோபித்துக்கொள்ள மாட்டாள் ” என்று சொல்லிக் குழந்தையைச் சமாதானப்படுத்தினள். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/120&oldid=592227" இலிருந்து மீள்விக்கப்பட்டது