பக்கம்:பவள மல்லிகை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ił6 பவள மல்லிகை

அன்பைப் பெறக் காரணமாக இருந்தது அது. இதுவோ துக்கம் தரும் காரியம். சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். எங்கள் ஊரில் நடந்த ஒரு பொருட்காட்சியில் திடீரென்று இப்பற்றிக்கொண்டது. அதில் உயிர்ச் சேதங்கூட நேர்ந் தது. நான் பிறந்து ஐந்து வருஷங்கள் ஆகியிருந்தன. என் தகப்பனர் அந்தப் பொருட் காட்சியில் ஒரு கடை வைத்திருந்தார். தீ விபத்தில் அவர் சிக்கி உயிரிழந்தார். அம்மா எப்படித் துக்க சாகரத்துள் ஆழ்ந்திருப்பாளோ ! அதை அறிந்துகொள்ளும் வயசு அப்போது எனக்கு. இல்லை. இந்த மாப்பாச்சி தீப்பிடித்து வெந்ததையும், அப்பா தீ விபத்தில் இறந்ததையும் முடி போட்டுப் பார்த் தாள் அம்மா. பின்னலே கடக்க வேண்டியதை முன்னலே, சித்தி காட்டிேைளா ? அப்பா முதலில் வைத்திருந்த பொம்மை அது; அவராகத் தந்த ஆண் பொம்மை. அதா வது அவருடைய பிரதிநிதியாக இருந்த பொம்மை அது. அதை முதலில் வழங்கின அவர், பிறகு வாழ்க்கையில் தம் மையே அம்மாவுக்கு வழங்கினர். ஆனல் தெய்வம் இரண்டு பொருள்களுக்கும் ஊனத்தை உண்டாக்கிவிட் டது. அவருடைய பிரதிநிதியாக இருந்த பொம்மை தீப் பட்டு மூளியாயிற்று ; அவரோ தீக்குப் பலியாகிவிட் டார். - --- -

அம்மா அந்த நிலையில் எப்படி யெல்லாம் தத்தளித் தாளோ ! யார் உத்வி செய்தார்களோ ! எங்கள் சிற்றப்பா வின் உதவியால் குடும்பம் குடும்பமாயிற்று. நானும் வளர்ந்து பெரியவனனேன். -

அப்பா காலமான பிறகு அம்மாவுக்கு இந்தப் பொம் மையிடம் அளவற்ற பற்று உண்டாகிவிட்டது. “கடவுள் ஒரு ஜோடியைப் பிரித்துவிட்டார். இந்த ஜோடியை நாம் பிரிக்கவேண்டாம் ' என்று எண்ணி இந்த இரண்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/122&oldid=592229" இலிருந்து மீள்விக்கப்பட்டது