பக்கம்:பவள மல்லிகை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோடி மாப்பாச்சி 117

காப்பாற்றி வந்தாள். கொலுவில் இந்த இரண்டும் இல்லா விட்டால் அவளுக்குக் கொலுவாகவே இராது. என் சிற் றப்பா பெண்கள் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார் கள். அம்மா கேட்கவே இல்லை. என்னிடம் ஒரு நாள் கதை கதையாக இந்த விஷயங்களையெல்லாம் சொன்னுள். எனக்கும் உபதேசம் செய்தாள். நீ அப்பா அம்மாவைச் சேர்த்துப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. இந்த இரண் டும், கன்ருக இருந்தபோது நானும் அப்பாவும் எப்படி இருந்தோமோ அதை கினைப்பூட்டுகின்றன. ஆகையால் இந்த இரண்டையும் பிரிக்காதே’ என்று எனக்குச் சொன் ள்ை. அந்த வார்த்தையை காம் காப்பாற்ற வேண்டாமா ?

沿 毫 - 豪 கோமதி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். கதையோடு அவள் உள்ளம் ஒட்டி அதகுல் ஏற்பட்ட உணர்ச்சியில் மிதந்தது. ' என்ன, இப்பொழுது எனக்குப் பதில் : யோசனையில் ஆழ்ந்துவிட்டாயே 1’ என்ருன் சங்கரன்.

"நீங்கள் மரப்பாச்சிக் கடைக்குப் போகவேண்டாம்' என்று துாக்கத்திலிருந்து விழித்தவளைப் போலப் பதில் சொன்னுள் கோமதி.

ஒகோ' மறுபடியும் அம்மா வந்து பிறக்கப்போகி ருள். அவள் வந்து, எங்கே என் பொம்மை என்று கேட் டால் என்ன செய்வது என்ற விசாரமோ ' என்று புன் சிரிப்புப் பூத்தபடியே பேசினன் சங்கரன்.

'உங்களுக்கென்ன ? எப்போதும் விளையாட்டுத் தான் ' என்று எழுந்தாள் கோமதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/123&oldid=592230" இலிருந்து மீள்விக்கப்பட்டது