பக்கம்:பவள மல்லிகை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பவள மல்லிகை

வேண்டுமென்ற கியதி இல்லை. அந்த அம்சம் இருக்கும் கதைகளிலும் வெவ்வேறு அளவில் வெவ்வேறு வகையில் அது அமைந்திருக்கும். அந்த அம்சத்தைத் தனியே எடுத்துக்காட்டினல் கதைக்கும் கால் உண்டு என்பது தெரியவரும். கதைக்குக் கால் இல்லை என்ற பழைய வசனம் எதல்ை ஏற்பட்டிருந்தாலும் சரி, அது முற்றும் சரியானது என்று சொல்லமுடியாது.

கதையின் பிறப்பு எல்லாரிடமும் ஒரேமாதிரி இருப்ப தில்லை. சிலருக்குச் சில சில வழக்கம் இருக்கும். சில எழுத் தாளர்கள் தலைப்பை முதலில் போட்டுக்கொண்டு கதையை எழுதத் தொடங்குவார்கள். வேறு சிலர் கதை முழுவதை யும் எழுதிவிட்டுத் தலைப்பைப் போடுவார்கள். கதையின் மையத்தை நிச்சயப் படுத்திக்கொண்டு எழுதத் தொடங்கி விட்டால், ள்.ழுதும்போதே சில சுழிப்புக்கள், சில திருப் பங்கள் கதையில் அமைந்துவிடும். முன்னலே யோசிக்கா மல் அந்தச் சந்தர்ப்பத்தில் உண்டாகும் எழுத்துச் சூட்” டில் உற்பத்தியாகின்ற பகுதிகள் அவை. சொற்பொழிவு ஆற்றுபவர்களுக்கும் இத்தகைய அநுபவம் உண்டு.

சில சமயங்களில் முதலில் ஒருவிதமாகச் சில சில் லறை நிகழ்ச்களை முடிவுகட்டியிருந்தாலும், பேணுவின் போக்கிலே அந்த நிகழ்ச்சிகள் மாறும்; முடிவே மாறுவ தும் உண்டு. எதிர்பார்த்ததைவிடச் சிறந்த முடிவாக அமைவதும், எதிர்பார்த்த அளவுக்குக் கதையில் 'களே கட்டாமல் போவதும் உண்டு. அவரவர்கள் அதுபவத் தோடு ஒட்டிப்பார்த்தால் இந்த நிலைகளுக்குத் தக்க உதா சனங்கள் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும்.

சிலர் ஒரு கதையின் சில பகுதிகளை முதலில் எழுதி விடுவார்கள்; பின்பு முதல் முடிவு எல்லாம் எழுதி ஒட்டுப் போட்டுப் பூர்த்தி செய்வார்கள். முதல் முறை எழுதுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/126&oldid=592235" இலிருந்து மீள்விக்கப்பட்டது