பக்கம்:பவள மல்லிகை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - பவள மல்லிகை

இருதயத் தாமரையின் மென்மையிலும் ஆனந்தம் அடை கிருன். இதை அந்த மனித மிருகம் உணரவில்லையே ! பூவைக் கண்டு வெறுப்பது மனித சுபாவமென்று சொல்ல லாமா ? அசுர சுபாவம் அது ; சே, சே! கொரேமான சாகஸ் சுபாவம் ! -

‘மாமி, நான் பள்ளிக்கூடத்திலிருந்து இதைச் சொல் லத்தான் வந்தேன். சாயங்காலம் முடிந்தால் வருகிறேன்' என்று என் எண்ணத்தைக் கலைத்தாள் அம்புஜம்.

"மறத்துவிடாதே என்னே வந்து போய்க்கொண்டிரு' என்று தழுதழுத்த குரலில் கூறினேன். -

"என்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள் ? இரண்டு நாளேக்கு ஒரு தடவையாவது வந்து பார்க்கிறேன்' என்று அபயம் கொடுத்தாள் அம்புஜம். -

இாண்டு நாட்கள் : மறுகாள் வரவில்லை; அடுத்த நாளும் அவள் வரவில்லை. மறுநாள், நான் போய்ப் பர்ர்ப் பக்ாக எண்ணியிருந்தேன். இடி விழுந்தாற்போலச் சமா சாம் வந்தது. 'அம்புஜம் பூப் பொறுக்கப் போகும்போது மோட்டார் வண்டியில் அகப்பட்டுக்கொண்டான்' என்ற திடுக்கிடும் செய்தி வந்தது. நான் மூர்ச்சை போட்டு விழுங் திருக்கவேண்டும். விழவில்லை. ஆல்ை ஆவேசம் வந்த வளைப்போல என் குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு ஒடினேன். எப்படி அவ்வளவு வேகமாக ஒடினே னென்று எனக்கே தெரியவில்லை. இங்கே புறப்பட்டவள் அம்புஜத்தின் வீட்டுக்குள் போய் கின்றேன். என் கண்ணே !' என்று சுத்தினேன். அம்புஜம் கட்டிலின்மேல் கிடந்தாள். .

வழக்கம்போல, சுந்தரமூர்த்தி விநாயகர்கோவில் தெரு வுக்குப் புறப்பட்டாளாம். பைகிளாப்ட்ஸ் ரோடில் போகும்

போது ஒரு கார் அவள்மேல் ஏறிவிட்டதாம். படுபாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/18&oldid=591952" இலிருந்து மீள்விக்கப்பட்டது