பக்கம்:பவள மல்லிகை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவள மல்லிகை - 1I

நல்ல கடுவெயில்; மணி மூன்று இருக்கும். அம்புஜம் வேர்க்க விறுவிறுக்க, " மாமி, மாமி ' என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள். -

‘ என்னடி கண்னே! இப்படி என்னே மறந்துவிட் டாய் ?' என்று அவளைக் கட்டிக்கொண்டேன். எனக்கு என் அப்போது தொண்டையை அடைத்தது, அழுகை வந்தது என்று தெரியவில்லை.

' மாமி, மாமி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில்தெரு தெரியுமா ? அங்கே என் சிநேகிதி வீட்டில் பவளமல்லிகை இருக்கிறது, மாமி. எங்கள் கண்ணனுக்கு இனிமேல் அக் தப் பூவைத்தான் சாத்தப் போகிறேன். இரண்டு நாளாக எனக்காக இங்கேயிருந்து கொண்டு வந்து கொடுத்திச் களே ! உங்களுக்கு இனிமேல் அந்தச் சிரமம் வேண்டாம். கண்ணன் இடம் காட்டிவிட்டான், மாமி ' என்று படபட வென்று கூறிள்ை. r -

இரண்டு நாளாக அவள் பவளமல்லிகை எங்கே கிடைக்கும் என்று தேடியிருக்கிருள், பாவம் !

" அப்படியானல்........ ? மேலே எனக்கு வார்த்தை வரவில்லை. என் அருமை அம்புஜத்தைத் தினந்தோறும் பார்க்கும் சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காதா ? ஒருகால் அவள் கண்ணனுடைய ஞாபகத்தில் என்னேயே மறந்துவிடு வாளோ? எங்கள் வீட்டுக் கண்ணனைக் கூடவா மறந்துவிடு வாள் ?

அட பாழும் பிராம்மணு! உனக்கு இந்தவயசில் இந்தக் குழந்தையின் பூப்போன்ற மனசு தெரியவில்லையே..! பூ மரத்தை வெட்ட எண்ணுகிருயே! அந்தக் குழந்தை எவ்வ ளவுஅழகாகச் சொன்னுள்! அந்தப் பூ மனிதருக்குப் பயன் படாதாம்; தெய்வத்துக்காகவே இருக்கிறதாம் மிகவும் மிருதுவான பூவை ஏற்கும் கண்ணபிரான், அம்புஜத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/17&oldid=591951" இலிருந்து மீள்விக்கப்பட்டது