பக்கம்:பவள மல்லிகை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பவள மல்லிகை

கும்போதே என்னை அறியாமல் கண்ணிர் விட்டேன். அவ் வளவையும் பொறுக்குவது என்ன, சுலபமான காரியமா? குழந்தை, நவீன கோபிகை போல வந்த அம்புஜம், சிர மத்தைப் பாராமல் சிரத்தையோடு பொறுக்கிளுளே !. எனக்கு இடுப்பு வலித்தது. பொறுக்கினவரைக்கும் போதுமென்று எடுத்துக்கொண்டு பெரிய தெருவுக்குப் போனேன். அம்புஜத்தின் வீட்டுக்குத்தான். அவள் பள்ளிக்கூடம் போயிருந்தாள். அவள் பாட்டியிடம பூவைக் கொடுத்துவிட்டு, “ பாட்டி, அம்புஜத்தைச் சாயந்தரம் தவருமல் வாச்சொல்லுங்கள். நானே பூவைக் கொண்டுவந்து தருகிறேனென்று சொல்லுங்கள்" - என்று சொல்லிவிட்டு வந்தேன். அந்த வார்த்தை அம்பு ஜத்திற்கு ஆறுதல் அளிக்கும் என்று கினைத்தேன். ஆளுல் எத்தனே நாளேக்கு நான் பூவைக் கொண்டுபோய்க் கொடுக்க முடியும்? அந்தக் கிாதகப் பிராம்மணர் மரத்தையே வெட்ட ஏற்பாடு செய்துகொண்டிருக்கிருரே!

来 宗 来 - அன்று மாலை அம்புஜம் வாவில்லை.எனக்குப்போதே போகவில்லை. அவளைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை. எங்கள் குழந்தையைக் கொஞ்சாமல் அவ ளுக்கும் போது போகாது. அப்படி இருக்க, அவள் வர வில்லை. சாயங்காலம் அவளைப் பார்க்கவேண்டுமென்று. கினைத்தேன். யாரோ சொந்தக்காரர்கள் வந்துவிட்டார் கள். கைக்காரியமும் ஒழியவில்லை. .

மறுநாள் காலையில் சீக்கிரம் அம்புஜத்தின் வீட்டுக் குப் போனேன். "அவள் சிநேகிதி ஒருத்தி வீட்டுக்குப் போயிருக்கிருள்' என்று பாட்டி சொன்னுள். கொண்டு போன பூவைக் கொடுத்தேன். வேலை இருந்ததால், சாயங் காலம் அம்புகத்தை அனுப்பச் சொல்லி, வத்துவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/16&oldid=591950" இலிருந்து மீள்விக்கப்பட்டது