பக்கம்:பவள மல்லிகை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவள மல்லிகை 9

"ஆமாம்! அது பூத்து யாருக்குப் பிரயோசனம்? சம்பங்கியா, மல்லிகையா, ரோஜாவா? இந்தப் பூவை யார் வைத்துக் கொள்கிருர்கள்?’

“அதற்கில்லை. யாராவது நாலு பேர் பூஜைக்கென்று பொறுக்கிக் கொண்டு போகிருர்கள்.” . . . .

"அதுவுந்தான் தொந்தாவு, காலேயில் எழுந்த வுடன் குளிக்கிற இடத்தில் கிழவிகளும் குழந்தைகளும் வந்தால் நாம் எப்படி நம் வேலையைப் பார்க்கிறது ?

எங்களவர் ஒன்றும் பேசவில்லை. நான் பல்லைக் கடித்துக் கொண்டேன். இவர் இப்படி மழுங்குணி மாங் கொட்டையாக அவர் சொல்கிறதைக் கேட்டுக் கொண் டிருக்கிருரே! என்று கோபம் கோபமாக வந்தது.

மறுநாளே கிழவர் அம்புஜத்துக்கு உத்தர விட்டு விட்டார்; “இந்தா, இனிமேல் பூப் பொறுக்க வராதே. மரத்தை வெட்டப் போகிறேன். நாளே முதல் இங்கே வந்து பூப் பொறுக்கக் கூடாது' என்று சுடு கடுப்பாகச் சொன் னர். - -

குழந்தை பதறிப்போய் ஒடி வந்தாள். " மாமி, இனி நான் என்ன செய்வேன் ! என் கண்ணனுக்காகவே இந்தப் பாரிஜாத மரம் முளைத்திருக்கிறதென்று கினைத்தேனே ! மாமி, என் கண்ணனுக்குப் பூவைத் தந்த இந்த மாத்துக்கு இந்தக் கதியா வரவேண்டும் பூவும் மொட்டுமாகக் குலுங் கும் மரத்தை வெட்ட ஒருத்தருக்கு மனசுகூட வருமா ?” என்று புலம்பித் தீர்த்தாள். கிழவர் எங்கோ வெளியில் போய்விட்டார். -

மறுநாள் அம்புஜம் காலையில் வாவில்லை. எனக்குத் தான் இழவு விழுந்தது போல இருந்தது. கொல்லப்பக்கம் போனேன். மலர்ப் படுக்கை போட்டாற்போல் பூ உதிர்ந் திருந்தது. நான் அவற்றைப் பொறுக்கினேன். பொறுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/15&oldid=591949" இலிருந்து மீள்விக்கப்பட்டது