பக்கம்:பவள மல்லிகை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பவள மல்விகை

'என்னையல்லவா கேட்க வேண்டும்?' என்று உரிமை பேசினர் கிழவர்.

“உங்களையா? சரி, கேட்கிறேன்; எங்கள் கண்ண லுக்குப் பூமாலை கட்டிச் சாத்துகிறேன். அதற்காகத் தான் பூப் பொறுக்குகிறேன். பவளமல்லிகைப் பூ, பக வானுக்காகத்தானே ஏற்பட்டிருக்கிறது? அதை நாங்க ளெல்லாம் வைத்துக் கொண்டால் உடனே வாடிப் போகும். பகவானைச் சேர்ந்தால்தான் அதற்கே சந்தோ ஷம். பக்தர்கள் மனசு மாதிரி மிருதுவான பூ அது."

இதென்ன! அம்புஜம் பிரசங்கமல்லவா செய்கிருள்? எனக்கு அதைக் கேட்டு உடம்பு புல்லரித்தது.

"அடியே. இந்தக் குட்டி என்ன, வாயாடியாக இருக்கிறதே! சரி, சரி, போ' என்று சொல்லி அந்தக் கிழவர் உள்ளே போய் விட்டார்.

粥 藝 * • , அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டுக்காரப் பிராம் மணர் எங்களவரோடு பேசிக் கொண்டிருந்தார். "என்ன, விசுவநாதன், இந்த வீட்டில் சில சில்லறை ரிபேர் செய் பலா மென்றிருக்கிறேன். முக்கியமாகக் கொல்லப் புறத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். அந்த மரம் இருப் பது பெரிய ஆபாசமாக இருக்கிறது. தினந்தோறும் ஊர்ப்பட்ட இலை விழுந்து சாக்கடைய்ை அடைத்துக்கொள் கிறது. அதை வெட்டிவிடலாமென்ம கினைக்கிறேன்.” ஹா! எனக்குச் சுரீரென்றது. அட, படுபாவிப் பிராம்மணு . . . . .

எங்களவர் என்ன சொல்லப் போகிருரென்று கவனித்தேன்.

"எவ்வளவோ காலமாக இருக்கிறது. நிறையப் பூக்கிறது. அதை வெட்டலாமா?' என்ருர் இவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/14&oldid=591948" இலிருந்து மீள்விக்கப்பட்டது