பக்கம்:பவள மல்லிகை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பவள மல்லிகை

.கிக்கொண்டா போகப் போகிருன் ' என்று சொன்னுள், எங்கள் வீட்டுப் பிராம்மணர் பிரபாவந்தான் அவ்வளவு துரம் பரவியிருக்கிறதென்று உணர்ந்துகொண்டேன்.

மெல்ல அம்புஜத்திற்கு அருகில் வந்தேன். வாத்தி யாரம்மாளிடம் என்னைப்பற்ற முன்பே அம்புஜம் சொல்லி யிருக்கிருள். நானும் பார்த்திருக்கிறேன். அவள் பக்கத் தில் பேசாமல் கின்றுகொண்டேன். கண்ணில் நீர் மல்க, அம்புஜத்தின்மேல் வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே நின்றிருந்தேன். என் கண்மணி, என்மேல் வைத்த பிரியமோ என்னவோ, அது வரையில் கண்ணேத்திறக்காத வள், “ அம்மா' என்று சிணுங்கியபடியே கண்ணேத் திறந் தாள். அவளுக்கு அம்மா இல்லை. கான்தான் முன்னே நின்றேன். ' கண்ணு ' என்று அடுத்தபடி மெல்லச் சொன்னுள். என் கையில் உள்ள குழந்தை களுக்கென்று சிரித்தது. இந்த உலகத்து நிகழ்ச்சியைக் கண்டா கண்ணன் சிரித்தான்? -

" மாமி, நீங்களா ? பூக்கொண்டு வந்தீர்களா?”

பூவைக் கொண்டுவருவதா? எனக்குத்தான் ஒன்றுமே புரியாமல் ஒடி வந்திருக்கிறேனே குழந்தைக்குப் பூவின் மேல்தான் எத்தனை ஆசை கொண்டுவந்திருக்கிருர்’ என்று சடக்கென்று வாத்தியாரம்மாள் பதில் சொல்லி, என் அசட்டுத்தனத்தால் விளைய இருந்த ஆபத்தினின்றும் காப்பாற்றினள். - -

米 实 ,米 பார்த்தேன், கண்ணிர் விட்டேன். இரண்டு வார்த்தை

பேசினேன். வீட்டுக்கு வந்தேன். வந்தது முதல் புலம்பிக் தீர்த்தேன். என் ஆத்திரத்தைக் கொட்டினேன். வீட்டுக் காார் கொடுமையைப்பற்றி என்ன என்னவோ சொன் னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/20&oldid=591954" இலிருந்து மீள்விக்கப்பட்டது