பக்கம்:பவள மல்லிகை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவள மல்லிகை iš

'கண்ணனுக்குக் கண் குருடாகிவிட்டது. குழந்தையின்

ஆசையை அறியாதவன அவன் தனக்குப் பூவைத் தந்த மரத்தை இரக்கமில்லாமல் வெட்டப்போவதைக் கண்ணன் தடுக்கவில்லை ; தன்னையே சகா தியானிக்கும் சிறுமியின் காலை ஒடித்த காரையும் தடுக்கவில்லை. இதுவா கியாயம் ? அநியாயம் செய்பவர்கள், பச்சை மரத்தை வெட்டுகிறவர் கள், பக்திமான்களைத் துன்புறுத்துகிறவர்கள் - இவர்கள் தம் மனம்போல நடமாடக் காலக் கொடுத்த தெய்வம், மகா பக்தையாகிய இந்தக் குழந்தையின் காலுக்கா ஊனம் உண்டாக்கவேண்டும் ?? .

என்ன வந்தாலும் வரட்டுமென்றுதான் கத்தி னேன். கிழவர் காதில் என் வார்த்தை பட்டதோ என் னவோ தெரியவில்லை. அன்று மாலை அந்தப் பிராம்மண ருடைய மனைவி என்னிடம் வந்தாள். 'அந்தக் குழந்தை வீடு எங்கே இருக்கிறது” என்று கேட்டாள்.

'எந்தக் குழந்தை' என்று தெரியாதவளைப்போலத் கேட்டேன்.

'அம்புஜம்.” .

கடுகடுப்போடு இடத்தைச் சொன்னேன். உடனே ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு அந்த அம்மாள் அம்புஜத்தைப் போய்ப் பார்த்து வந்தாள். நான் பிறகு போனேன். அந்த அம்மாள் மிகவும் பிரியமாகப் பேசினதாகச் சொன்னர் கள். “மரத்தை வெட்டிவிட்டீர்களா?' என்று அம்புஜம் கேட்டாளாம். இல்லை என்று பதில் சொன்னுளாம். -

நான் சிறிது நேரம் அம்புஜத்தோடு பேசிவிட்டு வந் தேன். காலில் எலும்பு முறிந்திருக்காது என்று டாக்டர் சொன்னதாகத் தெரிந்து ஆறுதல் பெற்றேன். -

治 . 兴° 始。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/21&oldid=591955" இலிருந்து மீள்விக்கப்பட்டது