பக்கம்:பவள மல்லிகை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் 23,

படிக்க வேண்டியிருப்பதால் தங்கிவிட்டதாகக் கடிதம் எழுதினன். அவன் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கவில்லை. தனியே அறை வைத்துக்கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டு வந்தான். ஹாஸ்டலில் நடக்கும் சமபந்தி போஜனம் வைத்தியநாத முதலியாருக்குச் சம்மதம் இல்லை. இப்போது விடுமுறைக் காலத்தில் ஹாஸ்டல் கிடையாது. தனியே ஹோட்டலில் இருந்த முத்துவுக்குச் சாப்பாட்டுத் தொங் தரவு இல்லை.

சென்னையிலிருந்து வந்த மனிதர் சொன்னவீருல் வைத்தியநாத முதலியாருக்குக் குழப்பம் ஏற்பட்டு. விட்டது. லீவுக்கு முத்து வராததும் சேர்ந்துகொண்டது. எப்படியாவது அவனுக்குப் பரீட்சை முடிந்தவுடன் கல் யாணத்தைச் செய்து வைத்துவிடவேண்டுமென்று தீர்மா னம் செய்துகொண்டார். “இங்கே அவசரமாக ஒரு. வேலை இருக்கிறது. உன் கல்யாண விஷயமாக ஏற்பாடு. செய்யவேண்டும். இரண்டு நாள் வந்து இருந்துவிட்டு உடனே போய்விடலாம்' என்று கடிதம் எழுதினர். ' கல்யாணமா 1 படிப்பே முடிந்தபாடில்லை. பி. ஏ. முடிந்த வுடன் மேலே சில ஆராய்ச்சிப் படிப்புக்குத் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறேன். கல்யாணத்தைப்பற்றி ஒரு. முயற்சியும் வேண்டாம்!' என்று எழுதிவிட்டான் பிள்ளே

{L} ffãðồft-f GõT.

இப்போது இதை வற்புறுத்தவேண்டாம். பரீட்சை முடியட்டும். அப்புறம் கையோடே சுப காரியத்தை முடித்துவிடலாம். இன்னும் மூன்று மாசந்தானே? என்று எண்ணியதோடு, தீவிரமாகப் பெண்களுடைய ஜாதகங். களேப் புரட்டத்தொடங்கினர் முதலியார். ஆனல் அதற்குள் காரியம்மிஞ்சிப் போய்விட்டது. முத்துவுக்கும் கல்யாணிக் கும் கல்யாணம் நடத்தும் விஷயம் சென்னையிலேயே ம்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/35&oldid=591969" இலிருந்து மீள்விக்கப்பட்டது