பக்கம்:பவள மல்லிகை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 - பவள மல்லிகை

மானமாகிவிட்டது. யதிராச பிள்ளைக்கு முத்து உள்ள தைச் சொல்லிவிட்டான். தன் தகப்பனர் இந்தக் கல்யா .ணத்துக்கு இணங்குவது கடக்காத காரியம் என்றும், தன்னை நம்பிக் கல்யாணம் செய்துகொடுப்பதையன்றி வேறு வழியில்லையென்றும் தீர்மானமாகச் சொல்லி விட்டான். அவர் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார். முற்போக்கு எண்ணமுடையவரானலும் முத்துவை அவ குடும்பத்திலிருந்து பிரிப்பது போலாகிவிடுகிறதே نهای مgua என்று வருந்தினர். தாய் தகப்பனைப் பிரிப்பது நல்லதா, காதலர்களைப் பிரிப்பது நல்லதா ? பெண் விடுதலை, காதல் மணம் முதலிய விஷயங்களில் திட்டமான கருத்தை யுடைய அவருக்குக் காதலரை உலகமே எதிர்த்தாலும் ஒன்று படச் செய்வதுதான் நியாயம் என்று பட்டது.

எதற்கும் தன் தீர்மானத்தைத் தகப்பணுருக்கு எழுதி விடுவதென்று முத்து நினைத்து நீண்ட கடிதம் வரைந்தான், கல்யாணியின் உயர்ந்த குணங்களையும், படிப்புத்திறமை -யையும், அவள் தகப்பனுருடைய கெளரவத்தையும் எழுதி ஞன். தங்கள் ஜாதி அல்ல என்ற ஒன்றைத் தவிர எல்லா வற்றிலும் உயர்ந்த சம்பந்தம் என்பதை விளக்கினுன். சுந்தார்க்குப் பரவை வாய்த்ததுபோல எனக்குக் கல்யாணி வாய்த்தாள். இது புண்ணியத்தின் புண்ணிய மென்றும் சிவனருளென்றுமே நான் கருதுகிறேன் ! என்று முடித்திருந்தான். -

வைத்தியநாத முதலியாருக்கு வந்த கோபம் கட்டுக்கு அடங்கவில்லை. மகாபாவி! பெரிய புராணத்தை மேற் கோள் காட்டுகிருன். சுந்தாராம் பறவையாம் இவன்

கண்டானும்!” என்று ஆரவாரித்துச் சீறி எழுந்தார்.

“ இந்தக் கல்யாணத்தை நடத்த நான் சம்மதிக்க மாட்டேன். மீறி கடந்தால் எனக்கும் உனக்கும் சம்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/36&oldid=591970" இலிருந்து மீள்விக்கப்பட்டது