பக்கம்:பவள மல்லிகை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் 3}.

தமே இராது.நீ செத்துப்போய் விட்டாயென்று கினைத்துக் கொள்கிறேன்' என்று சுருக்கமாக எழுதியனுப்பிவிட்டார். பையன் வழிக்கு வருவானென்று எண்ணினர்; வரவில்லை. விவாக முகூர்த்தம் நடக்கிற தேதியில் அவருக் குப் பத்திரிகை வந்தது. தடுக்க அவருக்குச் சந்தர்ப்பம் இல்லை. பல்லைக் கடித்துக்கொண்டு பத்திரிகையைச் சுக்கு நூருகக் கிழித்துவிட்டு உள்ளே போய்க் குப்புறப் படுத் துக்கொண்டு விம்மினர். அவர் மனைவியும் புலம்பினள். இனிமேல் என்ன செய்வது ! - பரீட்சையில் முத்து முதல்வகை கின்ருன். கல்யா யும் தேர்ச்சி பெற்ருள். காதல் மணம் செய்துகொண்ட பிறகு முத்து தன் முயற்சியினலேயே தான் வாழவேண்டு மென்று உறுதி பூண்டான். தகப்பனுருடைய ஆகாவை அவன் இழந்தான் ; மாமனர் ஆதரவில் வாழ்வது மதிப் பன்று என்றெண்ணி அதையும் இழக்கத் துணிந்தான். சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதால் ஏதோ ஒரு பாங்கியில் வேலை கிண்டத்தது. இப்போதைக்கு இருக்கட்டுமென்று ஏற்றுக்கொண்டு, தன் மனைவியோடு தனியே வாழத் தொடங்கினன். -

மனசு முறிந்து போன வைத்தியநாத முதலியார் ‘ உள்ளது போதும் என்று சொல்லி இரண்டு வருஷங் களில் ஜவுளிக்கடையை ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட் டார். சேர்த்த பணத்தை வாங்கிக்கொள்ளக் கூடியவன் தமக்கு உதவாமற் போனபோது, மேலும் மேலும் யாருக் காகப் பணம் சம்பாதிக்கவேண்டும்? உள்ளத்துக்குள்ளே வருத்தம் நெருப்புத்தணலைப்போல அடங்காமல் இருக்க, அவர் சிவபூஜையிலுைம் தேவார பாராயணத்தினுலும் தல தரிசனத்திலுைம் அதை அவிக்கப் பார்த்தார். உலகத் தில் என்ன நடக்கிறதென்பதைப்பற்றி அவருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/37&oldid=591971" இலிருந்து மீள்விக்கப்பட்டது