பக்கம்:பவள மல்லிகை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

歌8 பவள மல்லிகை

" நீ படித்த பெண். இங்கிலீஷ் கூடக் கொஞ்சம் தெரியும் என்கிருய். நீ எல்லாவற்றையும் சுத்தமாக வைத் திருப்பாயென்று எனக்குத் தெரியாதா? இங்கே நீ பண் அனும் காரியத்தைக்கொண்டு அதை ஊகிக்கத் தெரியாத முட்டாள் என்று வைத்துவிட்டாயோ '- முதலியார் சகஜமாகப் பேசினர். அந்த நிலைக்கு அவரைக் குழந்தை யும் தாயும் கொண்டுவந்து விட்டார்கள். .

'உங்களுக்குத்தான் இங்கிலீஷ் என்ருலே ஆகாது. அதிலும் படித்த பெண் என்ருல் அடியோடு பிடிக்காது. ஏதோ போளுல் போகிறதென்று, என்னைக் கண்டால் வெறுப்பதில்லை. நானும் ஒரு பி. ஏ யாக இருந்தால் என் முகத்தில்கூட விழிக்கமாட்டீர்களே!'

' என்ன அப்படிப் பேசுகிருய் உன்னைப்பற்றிக் குறைத்துப் பேசினுல் என் மனசு கஷ்டப்படுகிறது. நீ பி. ஏ. படித்தால் மிகவும் நல்லது. உன்னேடு சேர்ந்து அது நல்லதாகிவிடும். நான் என்ன, கல்வி யறிவையே வெறுக்கிறவன?” -

" பின்னே அடிக்கடி இங்கிலீஷ் படிப்பென்று கரிக்கிறீர்களே ?” እ

" நான் சுட்டுக்கொண்டவன் அம்மா, சுட்டுக் கொண்டவன். அந்த வேதனை தாங்காமல் அப்படிச் சொல்லுகிறேன்." . . . .

" என்னிடமும் அதே படிப்பு இருக்கிறதென்ருல் உங்கள் மனசு வேதனைப்படாதா?” * , ,

அது வேறு விஷயம், படிப்பினுல் கெட்டுப் போகாத கிலே உனக்கு இருக்கிறது.’

படிப்பினல் மனிதர்கள் கெட்டுப் போகிருர்க ளென்று நீங்கள் சொல்லத்தான் கேட்கிறேன். நல்ல வேளே! நான் உங்களிடம் நல்ல பேர் எடுத்துவிட்டேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/44&oldid=591987" இலிருந்து மீள்விக்கப்பட்டது