பக்கம்:பவள மல்லிகை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் - 37

இருந்திருந்தால், முத்துவுக்கும் ஒரு மங்கையர்க்கரசி கிடைத்திருப்பாளே! அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் ஞானசம்பர்தன் என்றுதானே பெயர் வைத்திருப்போம்? முன்னலே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை மறு படியும் பார்த்தார். இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? என் மனசைக் கரைக்கும் இந்தக் குழந்தையைப் போலக் தானே அவன் குழந்தையும் இருக்கும் இப்படிச் சென்ற சிந்தையை மீட்டுக்கொண்டார். சம்பந்தம், இங்கே வா' என்று குழந்தையை அழைத்தார். அது மெல்லத் தளர் நடையிட்டு வந்து முதலியாரின் முதுகின்மேல் சாய்ந்து கொண்டது. அதில்தான் எத்தனை இன்பம் எதோ நினைவு வந்தது முதலியாருக்கு "மங்கையர்க்காசி!” என்று கூப்பிட்டார். உள்ளே யிருந்து குழந்தையின் தாய் வங் தாள். 'உன் புருஷர் எப்போது ஊரிலிருந்து வருகிருர்?" என்று கேட்டார்.

> ஏன், நான் இரண்டு நாள் இங்கே இருந்தது உங்க ளுக்குப் பொறுக்கவில்லையா? இப்போதே எங்கள் வீட்டுக் குப் போய்விடுகிறேன் ' என்று பொய்க் கோபத்தோடு கேட்டாள் மங்கையர்க்கரசி. -

' என்ன, இப்படிப் பேச்சிலே பிடித்துக்கொள் கிருயே; நான் அப்படிச் சொல்வேன? இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லையே; வந்தால் இங்கே அழைத்துக் கொண்டு வா. அல்லது நான்தான் உங்கள் வீட்டுக்கு

p?

வருகிறேனே

' உங்ஸ் வீடு எங்கே? எங்கள் குடிசை எங்கே? அங்கே வந்தால் என்னைப்பற்றிய நல்ல அபிப்பிராய மெல் லாம் உங்களுக்குப் போய்விடும். எங்கள் வீடு சேரி போலே இருக்கும்.' - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/43&oldid=591983" இலிருந்து மீள்விக்கப்பட்டது