பக்கம்:பவள மல்லிகை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 . பவளமல்லிகை

'அடேடே! அப்படியிருந்துமா என் கண்ணிலே காட்டாமல் மறைத்து வைத்திருக்கிரும் ?” .

" அவரைக் காட்டிவிட்டால் பிறகு என்னை மறந்து விடுவீர்களே! நானும், இங்கே தேவாரம் பாடாவிட்டால் வேறு எங்கே போய்ப் டாடுவேன்? நீங்கள் என்னை மறக்க, நான் தேவாசத்தை மறக்க வேண்டியதுதான் !” -

கேட்டுக்கொண்டே இருந்த முதலியார் திடீரென்று, 'ஏய், இங்கே வா' என்ருர், தம் மனைவியை அவர் அழைக்கும் பாணி அது, அவள் வர்தாள். 'மங்கையர்க் காசி எவ்வளவு சாமர்த்தியமாகப் பேசுகிருள் பார்த்தாயா? இவ்வளவு பேசுவாளென்று கான் கினைக்கவில்லையே!” என்று புன்னகையோடு சொன்னர்.

“உங்கள் வார்த்தை கிமிஷத்துக்கு ஒரு தடவை மாறு கிறது.சிறிது நாழிகைக்கு முன் என்னைப் புகழ்ந்தீர்கள்;இப் போது வாயாடி,சண்டைக்காரி என்று வையாமல் வைகிமீர் கள்'என்று வேடிக்கையாகக் கூறினுள், மங்கையர்க்கரசி. முதலியார் முகம் சுருங்கியது. சற்றே வேதனை அடைந்தவர்போல, “என்ன அம்மா அப்படிச் சொல் கிருய் உன்னைத் தவறு சொன்னல் எனக்கு வாய் வெந்து போகும். நீ சாக்ஷாத் மங்கையர்க்காசிதான்' என்று குசல் தழுதழுக்க, மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் பாவனையில் சொன்னர். .

" நான் மங்கையர்க்காசி; அப்படியானுல் என் கணவர் கடன் பாண்டியாக்கும் அவர் காதில் பட் டால் என்ன சொல்வார்?' என்று வேடிக்கையைத் தளர்த் தாமற் பேசினுள் அவள். - -

முதலியர்ர் பெரிய புராணத்தில் பெருமதிப்புடைய வர். "கூன் பாண்டியரல்ல; கூன் நிமிர்ந்த நெடுமாறர்' என்று உடனே பதில் சொன்னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/46&oldid=591996" இலிருந்து மீள்விக்கப்பட்டது