பக்கம்:பவள மல்லிகை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் 41

'முன்னலே ஏதோ தப்புப் பண்ணித் திருந்தினவர் என்று சொல்லுகிறீர்களா?” என்று மடக்கினுள் அவள். “ இப்படி இழுத்துக்கொண்டே போனல் பேச்சிலே நான் சிக்கிக்கொள்வேன். கோல்வியை ஒப்புக்கொள் கிறேன். மறுபடியும் கேட்கிறேன்: உன் புருஷரை என் கண்ணிலே காட்டப்போகிருயா இல்லையா?”

" கேள்வியைப் பார்த்தால் உங்களுக்கு ஏதோ உரிமை இருப்பது போலவும், அதை ஸ்தாபித்துக் கொள்பவர் போலவும் இருக்கிறதே !”

ஏய், இங்கே வண. மங்கையர்க்காசி லா பாயின்ட் பேசுகிருள் பார்த்தாயா ? நீ வந்துதான் சமாதானம் பண்ணவேண்டும்.’’

முதலியார் மனைவி வந்தாள். என்ன சொல்லு கிறீர்கள்?' என்ருள். -

'இவள் புருஷரை அழைத்து வா என்று சொல்லு .கிறேன். பிடிகொடுத்தே பேசமாட்டேன் என்கிருள்.' * நீங்களே சொல்லுங்கள் அம்மா, மங்கையர்க்கரசி யென்று என்னைப் பாராட்டினல், என் கணவர் கூன் பாண்டியரென்றுதானே அவர் நினைக்கிருர் ?”

நான் அப்படிச் சொல்லவில்லையே! கூன் நீங்கிய பாண்டியரென்றல்லவா சொன்னேன்?

"சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். அப்படி யானல், அவருக்கு ஏதோ கூன் இருந்தது போலவும், அது நீங்கிவிட்டது போலவும் அல்லவா ஏற்படுகிறது? அங்கே ஞானசம்பந்தர் கூன் நீக்கிளுரே; இங்கே யார் அப்படி?’ என்ருள் மங்கையர்க்கரசி.

'இதோ இருக்கிருனே' என்று முதலியாரின் மனைவி அங்கிருந்த குழந்தையைச் சுட்டிக் காட்டினள். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/47&oldid=592000" இலிருந்து மீள்விக்கப்பட்டது