பக்கம்:பவள மல்லிகை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் பாண்டியன் 43.

பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில்,"தாத்தா!' என்ற சத்தம் கேட்டது. குடுகுடுவென்று குழந்தை ஞான சம்பந்தன் ஒடி வந்தான். இரண்டு காளாகக் காணுத ஆவல் அவனுக்கும் இருக்கும் அல்லவா? குழந்தைக்கு என்றும் இல்லாதபடி அலங்காரம் செய்திருந்தார்கள். முதலியார் எல்லாவற்றையும் மறந்து எழுந்து ஆவலோடு குழந்தையை வாரி எடுத்தார். அடுத்தபடி மங்கையர்க் கரசி மெல்ல வந்தாள். ' எங்கேயம்மா, இரண்டு நாளாகக் காணவில்லை?” என்ருர் முதலியார். - கூன்.பாண்டியரைக் கூட்டி வந்திருக்கிறேன்.” ' என்ன விளையாடுகிருயே!” ' இல்லை, இல்லை; கூன்.பாண்டியரை நெடுமாறாக்க வேண்டும். இந்த ஞானசம்பந்தன் பாதி ஆக்கியிருக் கிருன். மற்றப் பாதியைச் சிவபெருமானைப்போல, வைத்தீசுவரரைப்போல, நீங்கள்தாம் ஆக்கவேண்டும்' என்று சொல்லி வாசற் பக்கம் போளுள். ஒரு நிமிஷத் தில் அவள் தன் கணவரை உள்ளே அழைத்து வந்தாள். கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் இருவரும் முதலியார் காலடியில் விழுந்து எழுந்தார்கள். .

முதலியார் கண்ணை முன்னே ஒட்டினர். "என்ன முத்துவாl' அவர் ஸ்தம்பித்துப் போய்விட்டார்.

"அப்பா' என்ருன் முத்து. மங்கையர்க்காசி குழந்தையை மெல்ல வாங்கிக் கொண்டாள். முதலியார் கண்ணில் நீர் சொரிந்தபடியே வேகமாகச் சென்று முத்துவைக் கட்டிக்கொண்டார்.

இந்த அரிய காட்சியை அருகில் இருந்தபடியே, முதலியார் மனைவி பார்த்துக் குதூகலம் அடைந்தாள். அவளுக்கல்லவர் தெரியும், இதற்காக எவ்வளவு நாடகம் நடத்தவேண்டியிருந்ததென்று? -

அன்று முதல் கல்யாணி மங்கையர்க்காசியாகி

go

y

விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/49&oldid=592009" இலிருந்து மீள்விக்கப்பட்டது