பக்கம்:பவள மல்லிகை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா சம்

காலை நேரம், பத்து மணி இருக்கும்.

திருக்கழுக்குன்றத்தில் சில மாதங்கள் தங்கலா மென்று ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி வந்து ஒரு வாரம் ஆயிற்று, கொஞ்சம் கொஞ்சமாகச் சாமான்களைச் சேர்த்துக்கொண்டிருந்தோம். நான் ஒன்றும் செய்யவில்லை. என் அம்மாவும் மனைவியுக்தான் அந்தக் காரியத்தைச் செய் தார்கள். வீதியில் எது போனுலும் அதை வாங்குவது என்று திட்டம் போட்டார்கள். உமி போனலும் கூப்பிடு வது, உால்போனலும் கூப்பிடுவது. இந்தப் பண்டங்களை விற்கிறவர்களும் சரி, வாங்குகிற இரண்டு பெண்மணிகளும் சரி, வியாபார தோானையில் நடந்து கொள்வதில்லை. பேரம் பேசுவதும், ஊர் விவகாரம் பேசவதும், பழைய வியாபாரக் கதைகளைப் பேசுவதுமாக இந்த வியாபாரம் நடக்கும். நான் அவர்களிடையே நடை பெறும் சம்பாஷணையைக் கவனித்து வந்தேன். காசு கொடுத்து வாங்கும் சமாசாரப் பத்திரிகை களிலே காணுத பல உள்ளுர்ச் செய்திகளும், குடும்பச் சிக்கல்களும், வாழ்க்கைத் தத்துவங்களும், இன்பதுன்பக் கூறுபாடுகளும் எனக்கு வெளியாகும். . . . . . .

பண்டங்களை விற்க வருகிறவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிருர்கள் ஒருத்தி பட பட வென்று பேசுவாள் ; மற்ருெருத்தி கிதானமாகப் பேசுவாள். துடைப்பம் விற்க வருகிறவன், யானையை விற்பதுபோல ஜம்பமாகப் பேசுவான்; நாற்காலி விற்பவன் பணிவாகப் பேசுவான். விலை குறைத்துக் கேட்டால் சிறும் ஆசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/50&oldid=592013" இலிருந்து மீள்விக்கப்பட்டது