பக்கம்:பவள மல்லிகை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 பவள மல்லிகை

கூடைக்காரி திண்ணையில் கூடையை இறக்கி வைப்பாள். உள்ளே யிருந்து அம்மாவும் வந்து சேர்ந்துகொள்வாள். வியாபாரம் ஆரம்பமாகும். 'என்னடி வெண்டைக்காய் இவ்வளவு முற்றலாக இருக்கிறது?’ என்று கொண்டு வங் திருக்கும் பண்டத்தில் தோஷம் சொல்லி விவாதத்தைத் தொடங்கி வைப்பாள் என் தாய். ' என்ன அம்மா அப் படிச் சொல்லுகிறே! இங்கே பாரு. ஒடிச்சுக் காட்டறேன்’ என்று கூடைக்காரி ஒரு காயை எடுத்த மளுக்கென்று ஒடித்துக் காட்டுவாள், வாடலாக இருக்கிறதே' என்று அடுத்த குறையை எடுத்து விடுவாள் அம்மா. “இதுவா வாடல்? காலேயிலேதான் பறித்தது; இதைப் போய் வாடலென்று சொல்றியே ' என்று கூடைக்காரி சொல் வாள். உண்மையில் அது வாடலாக இராது. 'உனக்குக் கண் இருக்கிறதா? இதைப் போய் வாடல் என்று கூசாமல் நாக்கில் நரம்பில்லாமல் சொல்லுகிருயே!” என்று அங் தக் கூடைக்காரி கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்பா ளென்று நான் கினேப்பேன். அப்படிச் சுறுக்கென்று கேட்பது வியாபார சாகரிகம் அன்று என்பது எனக்குத் தெரியுமா? பிறகு விலையைப் பற்றி விவாதம் நடக்கும். அப்போதுதான் பட்டணத்துப் பேச்சு நடுவிலே வரும். அம்மா, ஒவ்வொரு நாளும் கவருமல் பட்டணத்தில் காய் கறி மார்க்கட்டுக்குப் போய்க் கணக்கெடுத்து வந்தவளைப் போலத்தான் பேசுவாள். கூடைக்காரி அதைக் கேட்டு விலையைக் குறைத்துக்கொள்வாளென்பது அவள் அபிப் பிராயம். ஆனல் அவள் என்னவோ தன் விலையையே தான் சொல்லிக்கொண்டிருப்பாள்.

கால பத்து மணி இருக்கும். இது வரையிலும் சொன்னது பொதவர்ன காட்சிகள். காலை பத்து மணி என்று ஆரம்பித்தேனே, அந்த நேரத்தில் நடந்தது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/52&oldid=592021" இலிருந்து மீள்விக்கப்பட்டது