பக்கம்:பவள மல்லிகை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் 47

நிகழ்ச்சி ; என் மனத்துக்குள் ஆழப் பதித்த சம்பவம். அதைச் சொல்ல வந்தவன்தான் இவ்வளவு து.ாரம் பீடிகை போடும்படி ஆகிவிட்டது. அக்கச் சம்பவம் நடந்தது நடந்தபடியே என் அகக் கண்முன் கிற்கிறது. காலே பத்து மணி என்ற நோம் கூடத் திட்டமாக எனக்கு நினவிருக் கிறது. -

அப்போது வீதியில் காய்கறி வரும் நேரம் அன்று. காயோ, கறியோ, கயிரோ காலேயிலே வந்துவிடும், அதற்கு மேற்பட்டு விற்பனைக்கு ஏதாவது தட்டுமுட்டுச் சாமான் வரும் ; பாய் வரும்; துடைப்பம் வரும். கூடை வரும்; முறம் வரும். ஆமாம்; அன்று முறக் கான் வந்தது. கையில் இரண்டு முறங்களை எடுத்துக்கொண்டு ஒருத்தி எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து அங்கே கின்று கொண்டிருந்த என் தாயினிடம், முறம் வேனுமோ?”என்று கேட்டாள். அம்மா எதோ ஞாபகமாக இருந்தாள். இல்லாவிட்டால் அவளே, "ஏ, முறம்” என்று கூப்பிட்டிருப்பாளே.

“ ஆமாம், வேணும்; ஆனல் நீ ஆண் விலே, குதிரை விலையல்லவா சொல்லுவாய்?' என்று அவளுக்கு வரவேற் பும், கண்டனமும் சேர்த்து வெளியிட்டாள் அம்மா.

முறக்காரி கிண்ணேயில் முறம் இாண்டையும் வைத் தாள்; "உளுத்த மூங்கிலாகப் பார்த்துப் பொறுக்கி வாங்கி இந்த முறத்தை முடைக்காயோ?”-இது அம்மாவின் கேள்வி. இதற்குள் உள்ளே குழந்தையைத் துங்கப் பண் ணிக்கொண்டிருந்த என் மனைவி வந்துவிட்டாள். பேரம் செய்யும் தந்திரங்களே அவள் இப்போதுதான் தன் மாமி யாரிடமிருந்து கற்றுக்கொண்டு வருகிருள். ஒவ்வொரு வியாபாரத்திலும் அம்மாவின் வாக்குச் சாதுரியம் எப்படி இருக்கிறதென்று கவனிக்கிருளோ என்னவோ தெரி யாது. பள்ளிக்கூடத்துக்குப் போகாவிட்டால் பாடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/53&oldid=592026" இலிருந்து மீள்விக்கப்பட்டது