பக்கம்:பவள மல்லிகை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. பவள மல்லிகை

வீளுகப் போய்விடுமே என்று கவலைப்படும் மாணுக்கனைப் போல, ஒரு வியாபாரத்தைத் தான் கவனிக்காவிட்டால் அந்த வியாபார அதுபவம் இல்லாமல் போய்விடுமே என்று அவள் நினைத்திருக்கலாம். அவள் வந்துவிட்டாள். உளுத்த மூங்கில் மாதிரி தான் இருக்கிறது ' என்று வந்தவுடனே என் தாயின் அபிப்பிராயத்தை ஆமோதித் தாள் அவள். - - -

' என்ன அம்மா, விஷயம் தெரியாமல் பேசுமீங்க. பச்சை மூங்கிலைப் பிளந்து பண்ணியிருக்குது. காஞ்ச மூங்கில் முடைய வருமா அம்மா ? பச்சை மூங்கிலின்னு, இதைப் பார்த்தாத் தெரியில்லையா?” என்று முறக்காரி சொன்னுள். அவள் பேச்சு ஆணித்தரமாக இருந்தது. நான் அதை வலித்தேன். அது காய்ந்த மூங்கிலே அல்ல; அப்படி இருக்க எப்படி உளுத்த மூங்கிலாக இருக்க முடியும்? இவர்கள் வாயை அடைக்கச் சரியான வெடி குண்டு போட்டாள் இவள். இதுவும் வெண்டைக்காய்ப் பேரமா என்ன?’ என்று நான் எண்ணினேன்; மனசுக் குள்ளே சிரித்துக்கொண்டேன்.

சரி, சரி; நாங்கள் முறங்கட்டுகிறபோது அந்த விவ. ாத்தைத் தெரிந்துகொள்கிருேம். இப்போதைக்கு இந்த முறம் வாங்கிக்கொள்ளுகிருேம்; விலையைச் சொல்.” என்று ரோசத்தோடு அம்மா பேசிள்ை.

"ஒரே விலை; ரெண்டு முறமும் முக்கால் ரூபா." * முக்கால் ரூபாயர'- அம்மா ஆச்சரியப்படுபவளைப் போல வாயைப் பிளந்தாள். - - -

  • பன்னிரண்டு அணுவா '-என் சகதர்மிணி ரூபாயை அணுவாக மாற்றி ஆச்சரியப்பட்ட்ாள்.

'இதே, திருவிழாக் காலமான ரெண்டு, ரெண்ட ரைக்கு விக்குமாக்கும்' என்ருள் முறக்காரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/54&oldid=592030" இலிருந்து மீள்விக்கப்பட்டது