பக்கம்:பவள மல்லிகை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் . - - 5i

'எட்டணுத்தான் தருவேன்' என்று அவள் பிடி வாதம் செய்தாள்.

“ அம்மா, உனக்குப் புண்ணியமாப் போவுது. தர்மம் செஞ்சதா நினைச்சுக்கோ. கடை வீதியில் கொண்டுபோய் வித்தா முக்கால் ரூபா சுளேயாக் கிடைக்கும். ஆனல் அங்கே போக நேரம் இல்லை."

“ என்ன அப்படி அவசரம்? . ' குழந்தையை வீட்டிலே விட்டுவிட்டு வந்திருக் கிறேன். அது பசியினலே அழும். இதோ நான் போக லும். நீங்க குடுக்கறதைக் குடுங்க"-அவள் குரலில் ஏதோ சோகம் தொனித்தது. - •.

'வீட்டிலே குழந்தையைப் பார்த்துக்கறவுங்க ஆரும் இல்லையா ?” -

நான் ஒண்டிக்காரி. அதெல்லாம் இப்ப என்னத் துக்கம்மா காசைக் குடுங்க. நான் போகனும், மனசு வச்சு ஒன்பதனக் குடுத்தாக் குடுங்க. அப்புறம் உங்க இஷ்டம்.” - -

இப்போது உள்ளே குழந்தை வீரிட்டுக் கத்தியது. " ....குடுங்க; சீக்கிரம் குடுங்க. குழந்தை துடிச்சுப் போயிடும்.' - - - х இந்தப் பேச்சைக் கேட்டபோது என் மனசு என்னவோ செய்தது. அவளுடைய குழந்தை துடிக் கிறதோ இல்லையோ, அதைக் கேட்க எனக்குக் காதில்லை. உள்ளே குழந்தை அழும் அழுகை, அவளுக்குத் தன் குழந்தையின் துடிப்பை கினைப்பு மூட்டி விட்டது.

என் மனைவியைக் கடைக்கண்ணுல் பார்த்தேன்; அவள் புரிந்துகொண்டாள். குழந்தையைக் கவனிக்க உள்ளே போய்விட்டாள். சில்லறை எடுத்துவர உள்ளே போன என் அன்னை வெளியே வந்தாள். "இத்தா, பன்னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/57&oldid=592033" இலிருந்து மீள்விக்கப்பட்டது