பக்கம்:பவள மல்லிகை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசித்திர உலகம் 55

கணகன சத்தத்துக்கிடையில், மனிதனுக்கு ஒய்வேது, ஒழிவேது அமைதியேது, ஆனந்தம் எது?

இந்தக் கிராமவாசிகளைப் பார்த்தால் எனக்கு எவ் வளவு பொருமையாக இருக்கிறது அவசர அவசரமாகச் சாப்பிட வேண்டுமா? படபடப்பாகக் காரியம் செய்ய வேண்டுமா? வருகிற தபாலையும்போகிற தபாலையும் பார்க்க வேண்டுமா? இன்றைக்குப் பம்பாய், நாளைக்குச் சென்னை என்று பயணம் கட்ட வேண்டுமா?- ஒன்றும் இல்லை. காலையில் சுகமாகக் காவேரியில் ரோடிவிட்டு, வரும்போது ஆண்டவன் திருக்கோயிலில் அாஹா என்று சொல்லிக் கொஞ்சம் தியானமும் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து அமைதியாக விவசாயமோ, வியாபாரமோ கவனிக்கலாம். என் நண்பன் திருக்கண்மாலி இருக்கிருன். அவனும் பணம் சம்பாதிக்கிருன்; நானும் சம்பாதிக்கிறேன். அவன் பணம் அம்ைதியாக வருகிறது; தேங்காயில் இளநீர் கிறைவதுபோல கிறைகிறது. என் பணம் சலசலப் போடு வருகிறது; ஒட்டைத் தொட்டியில் விழும் குழாய்த் தண்ணிர் போல. . ..

'நந்த குமார கிருஷ்ணு - நவநீத சோர் கிருஷ்ணு. வேணுவிலோல கிருஷ்ணு - விஜய கோபாலகிருஷ்ணு יין என்னுடைய சிந்தனையை மறுபடியும் இந்தக் குரல் கலைத்தது. கிருஷ்ணையரின் ச்ேசுக் குரல்தான் அது. ஆனல் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேட்ட மிடுக்கு அதில் இல்லை; உருக்கம் இருந்தது. பழைய கம்பீரம் இல்லை; கரகரப்பு இருந்தது. உற்சாகம் இல்லை; ஒய்வு இருந்தது. .

திருக்கண்மாலியை மறுபடியும் கேட்டேன் : “என், கிருஷ்ணயர் இன்னும் அப்படியே இருக்கிருர்? அவர் இன்னும் உஞ்சவிருத்திதான் எடுக்கிருரா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/61&oldid=592049" இலிருந்து மீள்விக்கப்பட்டது