பக்கம்:பவள மல்லிகை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 பவள மல்லிகை

என் தகப்பனர் அந்த ஊரில் வேலை பார்த்தார். பிறகு மாற்றலாகிவிட்டது. இளமையில் இருந்த ஊராகையால் அது சொந்த ஊரைப்போலாகிவிட்டது. அதோடு, மற்ற ஊர்களைக் காட்டிலும் அந்த ஊரின் ஒவ்வோர் அம்சமும் என் உள்ளத்திலே பதிந்திருந்தது. அப்படிப் பதிந்த படத்தில் கிருஷ்ணையர் உருவமும் ஒன்று.

இருபது வருஷங்கள் ஆகிவிட்டன, நான் இந்த ஊர்ப் பக்கம் வந்து. என் நண்பன் அடிக்கடி எழுதுவான்; “இந்த ஊரில் எனக்கு அபார அபிமானம் என்று அளக் கிருய். ஒரு தடவையாவது வந்து நாலு இாள் இருந்து விட்டுப்போக மாட்டேன் என்கிருய்” என்று எழுது வான். எனக்கு வரவேண்டும் என்ற ஆசைதான். அகண்ட காவேரியின் கரையில் பழைய தமிழ் நாட்டுக் கிராமத்துக்கு உதாரணமாக விளங்கிய அந்த ஊரில் காலு காள் என்ன, நாற்பது வருஷம் இருந்தாலும் நல்லது தான். தெய்வ பக்திக்கும் நல்ல மனிதர்களின் சுகவாசத் துக்கும் ஏற்ற இடம் அது.

ஆனல், நான் கர்நூலிலல்லவா இருக்கிறேன் விதி என்னே அங்கே இழுத்துக்கொண்டு போய்த் தள்ளி இருக் கிறதே! கர்நூலில் பெரிய வியாபாரக் கம்பெனியில் மானேஜராகக் கை நிறையச் சம்பளம் வாங்கிக்கொண் டிருக்கிறேன். கெளரவத்துக்கோ, அந்தஸ்துக்கோ, செளகரியங்களுக்கோ குறைவு ஒன்றும் இல்லை. தமிழ் நாட்டில் அமைதியான கிராமத்தில் வந்து பார்க்கும் போதுதான் என்னுடைய எகர வாழ்வின் பயனற்ற தன்மை புலப்படுகிறது. சதா யந்திரம்போல் உழைத்துக் கொண்டே யிருந்தால் போதுமா? மனச் சாந்தியுடன் அமைதியான முறையில் ஓடாமல் உழலாமல் வாழ வகை யில்லையே! கடபுடா சத்தத்துக்கிடையில், காசு பணத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/60&oldid=592046" இலிருந்து மீள்விக்கப்பட்டது