பக்கம்:பவள மல்லிகை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசித்திர உலகம்

" பஜனை மடம் கிருஷ்ணையா பாடுகிருர் ?"

& g ஆம் !”

“ இன்னும் இந்த ஊரிலேதான் இருக்கிரு.ரா ?”

வேறே போக்கிடம் ?” -

'ாகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்’ என்ற நாமாவளி ஜாலாச்சத்தத்துடன் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கிருஷ்ணையருடைய குரல் சிறிது ச்ேசுக் குரல். ஆகையால் பலர் பாடினலும் அந்தக் குரல் தனியே எடுத்துக் காட்டியது. தனுர்மாச பஜனை வழக்கம்போல் இந்த வருஷம் நடைபெறுகிறது. பல வருஷங்களாக, எனக்கு கினைவு தெரிந்த கால முதல், கிருஷ்ணராயபுரத்தில் இந்தப் பஜனையைக் கேட்டு வந்திருக் கிறேன். பரீராம நவமி, கோகுலாஷ்டமி, ராதாகல்யா ணம் என்று அவ்வூர்ப் பஜனை மடத்தில் ஒவ்வொரு விசேஷமும் நடக்கும்போது பக்கத்து ஊர்களிலிருந்து பாகவதர்களும் பஜனைக்காரர்களும் வந்து கூடுவார்கள். ஆறு நாளோ, பத்து நாளோ, பன்னிரண்டு நாளோ ஊர் முழுவதும் பஜனை மயம். கிருஷ்ண நாமமும் ராம காம மும் மூலைக்கு மூலே கேட்கும். குழந்தைகளெல்லாம், "கிருஷ்ணு ராமா கோவிந்தா - ஹரே - ராமா கிருஷ்ணு கோவிந்தா' என்று கைத்தாளம் போட்டுக் கொண்டு கூத்தாடும்.

என் இளமைக் காலத்தில் அந்த ஊரில் நான் இருக்

தேன். ஐந்தாறு வருஷங்கள் சேர்ந்தாற்போல இருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/59&oldid=592042" இலிருந்து மீள்விக்கப்பட்டது