பக்கம்:பவள மல்லிகை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 . பவள மல்லிகை.

முகத்திலே மலர்ச்சி; உடம்பிலே சுறுசுறுப்பு: வார்த்தை யிலே முறுக்கு.

安 寄 兴 மறுபடியும் வெளியிலே பஜனை ஒலி கேட்டது. அந்தப் பழைய தொனி எங்கே? இப்போதுள்ள குரல் எங்கே? அது விளக்கு; இது கிழல். அது உருவம்; இது படம். அது உடம்பு; இது எலும்புச் சட்டகம்.

பஜனைக் கூட்டம் என் நண்பன் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. என் நண்பன் மனைவி குடத்தில் நீர் கொண்டு வந்து பஜனைக்காரர்களுடைய காலில் விட்டாள். பிறகு மரக்கால் கிறைய அரிசியைக் கொண்டு வந்து ஒரு பிடி எடுத்துக் கூட்டத்தின் தலைவராக இருந்தவ ருடைய செம்பில் போட்டுப் பாக்கியை அருகில் ஒருவர் எடுத்துவந்த கூடையிலே போட்டுவிட்டுக் கூட்டத்தை வலம் வந்து நமஸ்கரித்து உள்ளே சென்ருள்.

இவ்வளவு கோமும் வாசலில் கூட்டம் கின்றிருந்தது. கான் கன்ருகக் கவனித்துப் பார்க்க முடிந்தது. பார்க் தேன்; கூட்டத்தின் தலைவரைத்தான் கூர்ந்து பார்த்தேன். கிருஷ்ணையா இந்த நிலையில் இருக்கிருர் உடம்பு மெலிந்துபோய், எலும்பு தெரிந்தது. மயிர் கரைத்துப் போயிருத்தது. மீசையுந் தாடியும் அடர்ந்து வளர்க் திருந்தன. அவற்றின் நடுவிலே அவர் முகம் அடை யாளமே தெரியவில்லை. அங்கே கின்றபொழுது இடை யிலே ராமா' என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டார்.

உடம்பில் மெலிவும் ஒய்வும் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டன. ஆனல், முகத்தில் மாத்திரம் ஒருவகை யான பொலிவு இருந்தது. இளமைக் காலத்தில் நான் பார்த்த காட்சியில் அவர் உஞ்ச விருத்திப் பிராமணாகத் தென்பட்டார். இப்போது முனிவரைப் போலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/64&oldid=592060" இலிருந்து மீள்விக்கப்பட்டது