பக்கம்:பவள மல்லிகை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசித்திர உலகம் !, §3.

தோற்றினர். உடம்பு இளைத்திருந்ததே ஒழிய உள்ளம் இளைத்தவராகத் தோற்றவில்லை.

கூட்டம் நகர்ந்தது. என் உள்ளமும் கூடவே நகர்ந்தது. கிருஷ்ணையர் ஏன் இன்னும் உஞ்ச விருத்தித் தொழிலை விடாமல் இருக்கிருர் அவருடைய பிள்ளை எங்கே? ஒருகால் இளம்பிராயத்திலே இறந்துபோய் விட்டானே?. அவரைப் பார்ப்பதற்கு முன் எனக்கு அவ்வளவு வேகம் உண்டாகவில்லை. பாாத்த பிறகு அல ரைப்பற்றி முழு விவரமும் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்தது. அவரையே கேட்கலாமா? அவரோடு பழகுபவர்களைக் கேட்கலாமா? என்று யோசித்தேன்.

மறுபடியும் என் நண்பன் திருக்கண்மாலியையே கேட்கலாமென் றெண்ணினேன்.

常 率 冰 - 掌 "கிருஷ்ணயரைப் பார்த்தால் வசிஷ்ட மகரிஷி. மாதிரியல்லவா இருக்கிறது ? அவர் முகத்தில் சாந்தம் நிலவுகிறது. அதனூடே துக்கத்தின் சாயையும் தோன்று கிறது. அவர் பிள்ளை இருக்கும் இடம் தெரியவில்லையா?” என்று கேட்டேன்.

' கிருஷ்ணையர் இப்போதென்ன, எப்போதுமே தபஸ்வி. அவரிடம் யாருமே மரியாதையாகவே பழகு கிரு.ர்கள். அவருடைய பிள்ளை, இருப்பதாகத்தான் கேள்வி. அவனைப்பற்றி யாரும் இப்போது பேசுவ தில்லை; அவரும் சொல்வதில்லை. உனக்கு அதைப்பற்றி எனப்பா கவலை?' என்ருன் அவன். . ... பல வருஷங்களுக்கு முன் என் தகப்பனரிடம் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சிதான் எனக்கு அவ்வளவு. ஆவலை எழுப்பியது. அவர் ஆசா பங்கம் அடைந்து. விட்டாரா ? ஏன்?-அந்தப் பழைய நிகழ்ச்சியை நண்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/65&oldid=592065" இலிருந்து மீள்விக்கப்பட்டது