பக்கம்:பவள மல்லிகை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பவள மல்லிகை

"ன் மாமி, கண்ணன் புல்லாங்குழல் ஊதினால் புலியும் பசுவும் பக்கத்திலே பக்கத்திலே நின்று கேட்குமாமோ இந்தக் காலத்திலே மனிதர்களெல்லாம் அடித்துக் கொண்டு சாகிறார்களே. கண்ணன் இப்போது இந்த உலகத்தில் வந்து புல்லாங்குழல் ஊதினால் எல்லோரும் சாதுவாய்ப் போய்விட மாட்டார்களா?"

அன்று கோகுலாஷ்டமியாகையால் தமிழ் வசனத்தில் உள்ள பாகவதத்தை நான் படித்துக்கொண்டிருக்தேன். தசம ஸ்கந்தத்தில் கோபாலன் செய்த திருவிளையாடல்களைப் படித்துக் கொண்டே வந்தேன், பக்கத்திலிருந்து அம்புஜம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் கேட்ட கேள்விதான் அது. குழந்தைப் பெண் ஆனாலும் அவளுக்குத் தெய்வ பக்தி அதிகம். கண்ணன் என்றால் அவளுக்குப் பிரியம். எங்காவது பாகவத உபந்நியாசம் நடந்தால் அவள் தன் பாட்டியுடன் போய்க் கேட்பாள். இந்தப் பழக்கத்தால் அவளுக்குக் கண்ணனுடைய கதைகளில் அநேகம் தெரியும். சில சமயங்களில் தான் கேட்ட கதையை அவள் சொல்லும்போது பார்க்கவேண்டும்; சாட்சாத் கோகுலத்தில் ஒரு கோபிகையானவள் - கண்ணனுடைய திருவிளையாட்டை நேரே கண்டு விவரிப்பது போலவே இருக்கும். அவளை அறியாமல் அவள் கண்ணிலே நீர் வந்துவிடும். "அழகான குழந்தை, கண்ணனை யாராவது அடிப்பார்களா, மாமி? அவனைப் பார்க்காமல், அவனோடு பழகாமல், அவன் பேச்சைக் கேட்காமல் இருக்கிற நமக்கே அவனிடம் அத்தனை ஆசையாக இருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/7&oldid=1406327" இலிருந்து மீள்விக்கப்பட்டது