பக்கம்:பவள மல்லிகை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பவள மல்லிகை

கிறதே. அவனே வளர்த்த அம்மாவுக்கு இருக்காதோ? அவனைக் கட்டிப்போட்டு அடித்தாளாமே! என்ன கல் மனசு பாருங்கள்." கொஞ்சம் மெளனம்; பின் கட கட வென அவள் கண்ணில் நீர் பெருகும்.

'கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுடன் விளையாடிய கோபிகளில் ஒருத்திதான் இப்படி வந்திருக்கிறாளோ!' என்றுகூட நான் நினைப்பேன். ஒன்பது வயசுச் சிறுமிக்குப் பொம்மையென்றும் பூவென்றும், துணியென்றும் மணியென்றும் ஆசை இருக்காதோ? அவள் ஆசையே அலாதி. பொம்மை முதலியவற்றில் ஆசையில்லையென்றா சொன்னேன்? உண்டு, உண்டு. ஆனால் எல்லாம் கண்ணனுக்காகத்தான். கிருஷ்ண பொம்மையென்றால் வைத்துக்கொண்டு கூத்தாடுவாள். அதற்கு நகை பூட்டுவாள். வித விதமான அலங்காரம் செய்வாள். பூச்சூட்டுவாள்.

ஆம், பூவைக் கோத்து மாலை கட்டிக் கண்ணனுக்கு அலங்காரம் பண்ணுவாள். இத்தனை திறமை இவளுக்கு எங்கிருந்து வந்ததென்று ஆச்சரியமாக இருக்கும். எப்படித்தான் பொறுமையாக அந்த அலங்காரத்தைச் செய்வாளோ! . -

அந்தப் பூமாலைதான் என்னையும் அம்புஜத்தையும் பிணைத்தது. எங்கள் வீட்டில் இவருக்குப் பாங்கியில் வேலை. காலையில் ஏழரை மணிக்கே போய்விடுவார். பதினொரு மணிக்கு வருவார். அவள் ஏழு மணிக்கே வந்துவிடுவாள். எங்கள் வீட்டுக் கொல்லையில் பவள மல்லிகை மரம் ஒன்று இருந்தது. ராத்திரியாகிவிட்டால் கம்மென்று பூத்துக் குலுங்கும். ஒரு மைல் தாரத்துக்கு அதன் வாசனை பரவும்.

காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தால் நேரே அந்த மரத்தடிக்குப் போய்விடுவாள். பூ பொல பொலவென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/8&oldid=1406365" இலிருந்து மீள்விக்கப்பட்டது