பக்கம்:பவள மல்லிகை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - - பவள மல்லிகை.

மாசம் மாசம் பணம் அனுப்புவதாகச் சொன்னன். அப் போது தான் என் ராமன் எனக்கு நல்ல புத்தியைக் கொடுத்தான். இவ்வளவு காலமும் நான் உஞ்சவிருத்தி எடுத்து வருகிறேன். பகவங்காம பஜனை செய்து வரு கிறேன். பெரியவர்கள், சாதுக்கள் செய்து வந்த காரியம். அது. பூரீ ராமனுடைய சங்கிதியில் பஜனை செய்யும் பாக் கியம் எனக்குக் கிடைத்திருந்தும், அதன் மகிமை எனக் குத் தெரியவில்லை. எந்தக் குறைவும் இல்லாமல் நான் இங்கே வாழ்ந்து வருகிறேன். அப்படி யிருக்க, நான் பெற்ற பிள்ளையிடத்திலே யாசகம் வாங்குவதா? அவன் எனக்குப் பணம் அனுப்புவது எதற்கு? தன்னுடன் நான் வந்து வாழக் கூடாது என்பதற்காகக் கொடுக்கும் லஞ்சம் போல அல்லவா இருக்கிறது? போலீஸ்காரன் தொடரா மல் இருக்க அவனுக்குக் கொடுக்கும் மாமூல் போல இது இருக்கவில்லையா? போலீஸ் இலாகாவில் அவன் கற்றுக் கொண்டது இது என்று கினைக்கிறேன். நான் ஊரார் முன் பாகவதனக இருக்கிறேன்; பிச்சைக்கானக இருக்க வில்லை. எதனுலும் எனக்குக் குறைவே இல்லை. இது. எனக்கு முன்பெல்லாம் தெரியவில்லை. என் பிள்ளை யின் மூலம் எனக்கு உண்மை புலனுயிற்று. பூரீராம கைங்கரியமே என் உத்தியோகம். என் ராமனை மறக்கா மல் அவன் பிரபாவத்தைப் பஜனை செய்வதைக் காட்டி லும் உத்தமமான வாழ்க்கை உண்டா? ராமன் - என் கோதண்ட ராமன்-என் சீதாராமன்-என் கல்யாண அவருக்கு மேலே பேச வரவில்லை. நாக்குத் தழுதழுத்தது. --

நடராஜன் வந்து அவரைப் பிடித்துக் கொண்டான். ாாமபிரான நினைத்து அவர் உருகிப் போய் அவசமாகி விடுவது வழக்கம்ாம். -

artney............... o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/70&oldid=592086" இலிருந்து மீள்விக்கப்பட்டது