பக்கம்:பவள மல்லிகை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தக் கண்ணிர் 为驻

துக்கும் மாணிக்கத்திற்கும் உறவினள். இன்னும் மண மாகாதவள். அழகு விக்கிரமாகத் திகழ்ந்த அவளிடம் நீலனுக்கும் ஆசை இருந்தது; மாணிக்கத்திற்கும் ஆசை இருந்தது. இருவரும் தங்கள் உள்ளக் கோயிலில் அவளே வைத்துப் பூசித்தார்கள். ஆனல் அவள் யாரை விரும்பி ஞள்? யாரை விரும்பவில்லை?--பெண் உள்ளத்தை அவ் வளவு எளிதிலே அறிந்துகொண்டுவிட முடியுமா ? - இருவருமே தனித்தனியே மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். தங்கத்தின் தகப்பனிடம் குறிப் பாகத் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர்கள். அவனே, "வயசு வந்த பெண் அவள். அவளுக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் பி ரியமோ அவனேயே பண்ணிக்கொள்ளட்டும். நான் குறுக்கே நிற்கப்போவ தில்லை. அவளிடம் இன்னுாைப் பண்ணிக்கொள் என்று நான் சொல்லமாட்டேன்’ என்று சொல்லிவிட்டான்.

அவளிடம் நேரே கேட்கும் துணிவு இருவருக்கும் வரவில்லை. நீலன் தங்கத்தை விரும்புவது மாணிக்கத்துக் குத் தெரியும்; அப்படியே மாணிக்கம் தங்கத்தை மணக்க முயல்வது லேனுக்குத் தெரியும். வஞ்சக உள்ளம் இல் லாமையால் அவள் விருப்பமே முடிவாக ஏற்றுக் கொள் வதற்குரியது என்ற இருந்தார்கள் இருவரும். இந்தச் காதல் போட்டியிஞல் அந்த இரண்டு காளையர்களிடை யிலும் இருந்த நட்புக்குப் பங்கம் ஒன்றும் ஏற்படவில்லை. அவர்களுடைய பெருந்தன்மைதான் அதற்குக் காரணம். சிற்பக் கலையைப் பற்றிய அறிவு தங்கத்துக்கும் உண்டு; சிற்ப எழிலை என்ருக ரசிக்கத் தெரிந்தவள். அவள் அழகிய சிற்ப உருவங்களைக் கண்டால் மணிக் கணக்காகப் பார்த்துக்கொண்டே இருப்பாள். லேனும் மாணிக்கமும் உண்டாக்கிய சிற்பப் படைப்புக்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/77&oldid=592115" இலிருந்து மீள்விக்கப்பட்டது