பக்கம்:பவள மல்லிகை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தக் கண்ணிக் 75

“எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஏன் நாமே இந்த முயற்சியை மேற் கொள்ளக் கூடாது? நல்ல இடமாகத் தேர்ந்து குகைகளைக் குடையலா மென்றே தோன்று கிறது” என உற்சாகத்தோடு பேசினுன் நீலன். -

தங்கம் வாய் திறந்தாள்; அப்பா கூட உதவி செய்ய லாம். ஆளுல் சிறு வயசுடையவர்கள் செய்தால் வேக மாகக் காரியம் முடியும். இங்கே பாறையைக் குடைந்து மண்டபம்போல ஆக்கும் வீரனுக்கு மாலையிட வேண்டு மென்று யாரேனும் ஒரு பெண் விரும்பினுல் அது ஆச் சரியமாகாது.”

இப்போது தங்கத்தின் தகப்பன் அவளே உற்று நோக்கினன். தன்முன் கிற்கும் இளைஞர்களே அவள் போட்டியில் ஈடுபடச் செய்யப்போகிருளா என்ன? பழைய காலத்தில் சாகசச் செயலில் யார் ஜயிக்கிருர் களோ அவருக்கு மாலையிடும் வழக்கம் இருந்ததாகக் கதைகளில் கேட்கிருேம். தங்கம் இப்போது அத்தகைய சுயம்வரத்தை விரும்புகிருளா? கலைப் போட்டியில் ஜயிக் கும் காளையைக் கைப்பிடிக்கும் கருத்துடையவளா?... தந்தை இவ்வளவும் எண்ணினன்; இதற்கு மேலும் எண்ணிஞன். . -

“கலைத் திறமையைக் காட்டச் சந்தர்ப்பம் வந்தால் கலைஞன் சும்மா இருப்பானு' என்று தட்டி எழுப்பப் பெற்றவனைப் போலச் சொன்னன் மாணிக்கம்.

"அப்படிச் சொல்லுங்கள். எங்கே, பார்க்கலாம். இங்கே அழகிய குகையை யாராவது குடையட்டும். அவருக்கே கான் மணமாலே சூட்டுகிறேன். கலேயை விலை யாக வைத்து என்ன அர்ப்பணம் செய்யத் தயாராக இருக்கிறேன்." அவள் இதைக் கூறும் போது ஆவேசம் வந்தவளைப்போலப் பேசிள்ை. - х

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/81&oldid=592132" இலிருந்து மீள்விக்கப்பட்டது