பக்கம்:பவள மல்லிகை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தக் கண்ணிர் 8].

கத்தையே மறந்து அவன் சிற்பத்தில் மூழ்கியிருப்பதைக் கேட்கக் கேட்க அவளுக்கு ஆனந்தம் உண்டாகும். சிக் கிரம் முடியவில்லையே! என்ற வேதனையும் ஏற்படும்.

யானைத்தீவுக்கு இப்போதெல்லாம் அதிகமாக யாரும் போவதில்லை. லேனுக்குச் சோறு கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவார்கள்; அவ்வளவுதான். அவளுேடு பேசுவது கூட இல்லை. அவனுக்குப் பேச நோம் ஏது :

லேன் உள்ளத்தில் வகுத்துக்கொண்ட சிற்ப மண்ட பம் கண்முன் கல்லிலே உருவாகி விட்டது. ஆஹா! என்ன அழகிய கலைக் கோயில் தேவர்கள் வந்து அமைத் தது போல அல்லவா இருக்கிறது ? எல்லாம் முடிந்த பிறகு முழுமையும் ஒரு முறை பார்த்தான் லேன். தன் தோளைத் தானே தட்டிக்கொண்டான். சங்தோஷத்தால் வெறிக் கூச்சல் போட்டான். அந்த உவகை வெறி அடங் கின பிறகு ஓரிடத்தில் உட்கார்ந்தான். அப்படியே தாங் கிப் போனன். .

எழுந்த பிறகு மறுமுறை தன் கைவேலை முழுவதும் கிதானமாகப் பார்த்தான். தான் எப்போது இந்த வேலை யைத் தொடங்கியது என்ற கேள்வி தோன்றியது. மெது வாக அவனுக்குப் பழைய செய்திகள் கினைவுக்கு வந்தன; இதுவரையில் மறந்திருந்தவை யெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. தங்கம் அவன் அகக் கண்ணில் வந்த கின்ருள். அவளை மணம் செய்துகொள்ளும் ஆசையிலிருந்தல்லவா இந்தக் குகை ஆரம்பமாயிற்று இப்போது இது முடிந்து விட்டது. அவள் இதை இப்போது பார்த்தாளானுல் எவ் வளவு பூரித்துப் போவாள் இப்போது அவன் பழைய நீலகை இருந்து எண்ணினன். சோறு கொண்டு வந்தவ னிடம் சொல்லியனுப்பினன்; ‘'வேலை முடிந்துவிட்டது. தங்கத்தை அழைத்து வா" என்றுதான். தங்கம் பழைய

- ፀ - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/87&oldid=592156" இலிருந்து மீள்விக்கப்பட்டது