பக்கம்:பவள மல்லிகை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பவள மல்லிகை

பரிவாரங்களையும் மூலமூர்த்திகளையும் படிப்படியாகப் பொறித்தான். அணிகளையும் ஆடைகளையும் மெல்ல. மெல்ல வனைந்தான். முகத்தில் மயிரிழை மயிரிழையாக மெருகேற்றினன். ஒவ்வொன்றும் பூர்த்தி பெற்று முழு உருவமாகத் தோற்றம் பெற்றது. அதைக் கண்டு கண்டு களிகூர்ந்தான்.

வெளியே, காலம் ஒடிக்கொண்டிருந்தது. உள்ளே கலையுருவங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. காற்றும் மழையும் வெயிலும் வெப்பமும் அவனுக்கு உறைக்க வில்லை. நாளும் வாரமும் மாதமும் வருஷமும் அவனே அசைக்கவில்லை. அவன் தாடி வளர்ந்தது; அதுதான் காலம் செய்த மாறுபாடு. அவன் நெற்றியில் சுருக்கங்கள் ஏற்பட்டன; அதுவும் காலத்தின் விளைவு. ஆனல் இந்த மாறுதல்கள் தன்னிடம் சேர்ந்திருப்பதை அவன் உணர வில்லை. ஒவ்வொரு புதிய உருவமும் முற்றுப் பெற்ற போது புதிய பிறவியை எடுத்தவனைப்போல ஆளுன் நீலன். நாட்கள் மாதங்கள் ஆயின; மாதங்கள் வருஷங்கள் ஆயின. அங்கே மும்பையில் இந்தக் கலைப்பணியை மூட்டி விட்டவள், கன்னியாக இருந்தவள், மனைவியாளுள். இப் போது தாயும் ஆகிவிட்டாள். ஒரு குழந்தை, பிறகு இரண்டு குழந்தை; இப்போது மூன்ருவது குழந்தையும் பிறந்திருக்கிறது. ஐந்து வருஷங்களில் மூன்று குழந்தை கள் பிறந்துவிட்டன. அவள் மாணிக்கத்தோடு வாழ்க் தாள். அவனைக் கணவகை ஏற்றுக்கொண்டாள். ஆனல் நீலனே மறந்துவிட்டாளா? அதுதான் இல்லை. அவனை இப்போதெல்லாம் அதிகமாக கினைத்தாள். இப்போது என்ன செய்கிருரோ! எப்படி இருக்கிருரோ? வேலை எப் போதுதான் முடியப்போகிறதோ என்று எண்ணிஞள். யாராவது போய் வந்தால் விவரங்களைக் கேட்டாள். உல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/86&oldid=592152" இலிருந்து மீள்விக்கப்பட்டது