பக்கம்:பவள மல்லிகை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாத்தக் கண்ணிர் 79

ஒடம் கரையைச் சேர்ந்தது. மாணிக்கத்தின் உள்ள மாகிய ஒடமும் இன்பக் கரையை அடைந்தது. ஒரு நல்ல நாளில் தங்கத்தை மாணிக்கம் மணந்து கொண்டான். இனிமேல் அவனுக்கு யானைத் தீவில் வேலை இல்லை. அதை நீலனுக்கே விட்டு விட்டுத் தங்கத்தின் காதலிலே லயித் திருந்தான்.

4 யானைத் தீவில் நீலன் சிற்பங்களைச் செதுக்கி வந் தான். நடராஜரின் ஆனந்தத் தாண்டவம் அற்புதமாகச் சமைந்து விட்டது. பிறகு மற்முேரிடத்தில் உமாதேவி யார் ஊடற் காட்சியை அமைத்தான். அதற்கு நேர் எதிரே ராவணன் மலையை எடுக்க உமாதேவி சிவபெரு மானே அணையும் காட்சியைச் சிலையில் செதுக்கினன்.

அவன் கையில் கல் மெழுகைப்போல வளைந்து கொடுத்தது. கையும் காலும், மார்பும் வயிறும் அவன் சிற்றுளியால் உண்டாயின; முகங்கள் தோன்றின; அவற் நில் முறுவலும் மலர்ந்தது. கோபம், தாபம், உவகை ஊக்கம்-இத்தகைய பாவங்களேச் சிற்ப உருவங்களில் காட்டினன். வண்ணமில்லை, கிண்ணமில்லை. எல்லாம் கல்; ஒரு சில் பெயர்ந்தால் உருவமே மூளியாகிப் போகிவிடும். அத்தகைய நிலையில் அணுஅனுவாக அவன் கோலஞ் செய்தான். குகை மண்டபத்தின் நடுவில் திரிமூர்த்தி யுருவத்தை அமைத்தான். மூன்று மூர்த்திகளும் ஒருங்கே அமைந்த திருவுருவம் அது. இரவெல்லாம் உள்ளக்

கிழியில் எழுதிக் கற்பனை செய்வான். பகலெல்லாம் உளி யில்ை அவற்றை உருவாக்குவான். - -

பரிவாங்களையும் மூலமூர்த்திகளையும் படிப்படியாகப் பொறித்தான். அணிகளையும் ஆடைகளையும் மெல்லப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/85&oldid=592148" இலிருந்து மீள்விக்கப்பட்டது