பக்கம்:பவள மல்லிகை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தக் கண்ணிர் - 33

குடைந்து சிற்பத்தைப் பொறித்தது அயலானுக்கு இன் பத்தைப் பறி கொடுக்கவா ? ஒழி, ஒழி ' பைத்தியம் பிடித்தவனைப்போல் அவன் சிற்பத்தின் சில பகுதிகளே உடைத்து விட்டான்.

அதற்குள் மாணிக்கம் ஒடினன். உடன் வந்தவர் களும் ஓடினர்கள். நீலனைக் கட்டிப் பிடித்தார்கள். “என்னடா நீலா, இப்படிச் செய்கிருய் உயிரைக்கொடுத் துச் செய்ததைக் குலைக்கப் புகுந்தாயே!” என்று அழுகை யும் கூச்சலுமாகச் சொன்னர்கள். -

அவன் அடங்கவில்லை. தங்கம் ஓடிவந்தாள். கண்ணிர் தாரை தாரையாக ஊற்றத் தலைமயிர் குலைய ஒடி வந்தாள். திடீரென்று நீலன் காலில் விழுந்து அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டாள். ' அண்ணு, நீ என் தெய்வம்; நான் உன் பக்தை. இந்தக் காரியத்தை நிறுத்தி விடு. நான் சொல்லவேண்டியதைச் சொல்கிறேன். கொஞ்சம் காது ’ என்று அழுதாள். அவளுடைய பெண்மைக் குரல் காதில் விழுந்தபோது லேன் உள்ளம்

கொடுத்துக் கேள்

வேதனைப்பட்டது. தன் தலைமயிரைப் பிய்த்துக்கொண் டான். ' உலகம் பொய் மாயை ! கற்பனை வெறும் தோற்றம் போலி!” என்று கத்தின்ை.

கிடந்த படியே தங்கம் பேசினுள். ஆம் அண்ணு, நீ சொல்வது தெய்வ வ்ாக்கு. உலகம் பொய் தான், மாயை தான். ஆனல் இந்தப் பொய் உலகத்தில் மெய்யாக நிற்பது கலை. இந்த மாயா உலகத்தில் மாயையை வென்று வாழ்வது கலை. நீ அதைச் சிருஷ்டித்தாய். சிருஷ்டித்த வனே அழிப்பது பாவம்! பெற்ற பிள்ளையைக் கழுத்தைத் திருகிப் போடும் தாய் உண்டா?”

அவளிடம் அழுகையும் பேச்சும் கலந்து கலந்து வக் தன. லேனுடைய வெறி அடங்கியது. கலை என்ற வார்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/89&oldid=592164" இலிருந்து மீள்விக்கப்பட்டது