பக்கம்:பவள மல்லிகை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பவள மல்லிகை

தையை அவள் அடுத்தடுத்துச் சொன்னுள். அது அவன் காதில் விழவிழ, அவனுடைய படபடப்பு கின்றது. சோர்வு ஏற்பட்டது. அப்படியே உட்கார்ந்துகொண்டான். இப் பொழுது அவள் எழுந்த கின்ருள்.

" அண்ணு, நான் சொல்வதைக் கேட்கிருயா இந்த உன்னதமான கலையை நிர்மானம் செய்த தெய்வம் நீ என்று உண்மையாக மதிப்பு வைத்துப் பேசுகிறேன். உன்னுடைய ஏமாற்றத்துக்குக் காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன்.இந்தக் கலைமேல் ஆணையாக,உன்மேல் ஆனயாகச் சொல்கிறேன். உன்னை ஏமாற்றவேண்டுமென் பது என் கினேவு அல்ல.உன்னுடைய கலையை மலரச் செய்ய வேண்டுமென்பதுதான் என் ஆசை. உலக இன்பங்களெல் லாம் காலத்தால் வாடிப்போய்விடும். என்னைப் பார். முன்பு நான் எப்படி இருக்தேன்? இப்போது என் உடல் தேய்ந்து அழகு மறைந்து கிற்கிறேன். இதுதான் உண்மையான உலகம். இதற்கு வளர்ச்சி உண்டு. வாட்டம் உண்டு. ஆளுல் படைத்திருக்கும் சிற்பக்கோயிலுக்கு வாட்ட மில்லை. நீ உண்டாக்கிய உருவங்களுக்கு கரை திரை மூப் t9 દ્વાર્ટઝ),”

"அப்படியானல் நீ ஏன் அப்பொழுதே உண்மையைச் சொல்லக்கூடாது?’ என்று தலையைத் தூக்கிக் கேட்டான் நீலன்.

‘'நீ கேட்பது கியாயம் அண்ணு, கியாயம். இாண்டு வருஷங்களுக்குப் பிறகு நான் இங்கே வந்து பார்த்தேன். நீ அப்போதுதான் உன் சிற்பத்தைத் தொடங்கியிருந்தாய். உலகை மறந்து வேலை செய்யும்படி விட்டுவிட்டால் நீ தெய்விகச் சிற்ப உருவங்களைச் சிருஷ்டிப்பாயென்பது எனக்குக் தெரியும்.ஆகவே உன்னை உன் போக்கிலே விட்டு விடுவதுதான் தர்மம் என்று எண்ணினேன். என் எண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/90&oldid=592165" இலிருந்து மீள்விக்கப்பட்டது