பக்கம்:பவள மல்லிகை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பவளமல்லிகை

உன் அறிவு.வேலை செய்தது; உன் உள்ளம், உன் உயிர் வேலே செய்தது. ஆஹா என்ன அற்புதமான சிருஷ்டி!"

“ தங்கம், போதும். எனக்குப் புத்தி வந்தது. உண் மையில் தான் ஒரு கணம் பேயாகத்தான் மாறி விட்டேன். மாணிக்கம், நீ பாக்கியசாலி, ஒரு விதத்தில். ஆனல் உன் னைக் காட்டிலும் கான் அதிகப் பாக்கியசாலி. தங்கத் தின் காதலைப் பெற்ற பாக்கியசாலி. ஆனல் நான் தங்கத் தின் ஆணையைப் பெற்ற பாக்கியசாலி.” -

“ அப்படிச் சொல்லாதே அண்ணு ' என்று இடை மறித்தாள் தங்கம், “நீ என்னுடைய ஆணையைப் பெற வில்லை. என்னுடைய அஞ்சலியைப் பெற்ருய். மறுபடி யும் சொல்கிறேன் ; நீ என் தெய்வம். எல்லோருக்குமே தெய்வம். உன் கையில் உருவானது தெய்விகப் படைப்பு. அது என்றும் வாழும். உன் கலைத் திறமை அதோ அந்த அற்புதத் தாண்டவ மூர்த்தியை உண்டாக்கியது. இந்தப் பாவியின் கினைவு உனக்கு வெறியை மூட்டி அந்தச் சிறிய ஊனத்தை உண்டாக்கிவிட்டது. அதைப் பார். உடைந்த உறுப்பிலிருந்து ரத்தம் சொட்டவில்லை. ஆனல் அதைக் கானும் என் இருதயத்தில் ரத்தம் சொட்டுகிறது. கிமிர்ந்து பார், ஒரு கணத்தில் t செய்த காரியத்தை.” .

லேன் கிமிர்ந்து பார்த்தான். ஊனமான சிற்பம் அவன் கண்களில் பட்டது. அதில் ரத்தம் சொட்டவில்லை யென்பது உண்மை ; தங்கத்தின் இருதயத்தில் ரத்தம் சொட்டிபுகா இல்ழை ? அதை உணர முடியாது. ஆனல் நீலன் கண்ணில் மாத்திரம் ரத்தக் கண்ணிர் வழிந்தது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/92&oldid=592167" இலிருந்து மீள்விக்கப்பட்டது