உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

9

சீறிச் சீறிப் பேசினான். கணவன். சிந்திய கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி, அவன் உரையைக் கேட்டுக் கலங்கினாள் அவன் துணைவி. புருஷன் கோபத்தால் காரசாரமாகப் பேசுகிறானே என்பதல்ல அவள் கலக்கத்துக்குக் காரணம். அவன் கூறினது உண்மை! அவைகளை அவள் உணராமலேயேதான் இருந்து வந்தாள். அவன் சொன்ன பிறகுதான், உண்மை அவளை உறுத்தத் தொடங்கிற்று. அதனாலேயே, அவள் அவ்வளவு கலங்கினாள்.

புத்தருடைய பொன்மொழிகள் நாட்டிலே பரவிக் கொண்டிருந்த காலம், பூபதிகள் சிலர் புத்தமார்க்கத்தையே தழுவியும் கொண்டனர். பண்டைய மார்க்கம் நிலைத்திருந்த சில மண்டபங்களிலேகூட, சிலர், புத்தமார்க்கத்தைக் கடைப்பிடித்து, பிட்க்ஷுக்களாகி விட்டனர். ஓங்கி வளரும் புத்த சமயத்தைத் தடுப்பது, பலமான புயலை விலை கொடுத்து வாங்குவதற்கொப்பாகும் என்று யூகமுள்ள மன்னர்கள் உணர்ந்து நடந்தனர். உருத்ர தேவன் ஆலயமும் அதற்குப் பக்கத்திலேயே புத்த மடமும் கட்டலாயினர். புத்தபிட்க்ஷுக்களைக் கண்டவுடனே, தமது ஆதிக்கத்துக்கு உலை வைக்கிறார்களே இந்தப் புது முறைக்காரர்கள், என்று கோபம்தான் சனாதனமார்க்கப் பூஜாரிக் கூட்டத்திற்கு. ஆனால் வெளியே தெரியவிடுவதில்லை. பௌத்தம், அரிய பெரிய உண்மைகளுக்கு இருப்பிடம். தூய்மைக்குப் பிறப்பிடம், என்று பாராட்டிப் பேசுவர். இந்த உத்தமமான கோட்பாடுகள் சாமான்யமானவைகளன்று, என்று புகழ்வர். இங்ஙனம் புகழுரை, கூறிப், புதுமுறைக்காரரை மயங்க வைத்துவிட்டு, மெள்ளத் தமது மார்க்கத்தைப் பிணைப்பர்; இம்முறைகள் அனைத்தும் உபநிஷத்துக்களிலே உள்ளன. வேதசாரம் அது என்று கூறுவர். அவர்களின் வஞ்சகம், பசும் புற்றரையிலே, வளைந்து நெளிந்து செல்லும் சர்ப்பம் போல் உலவிற்று. வேங்கைப் போலப் பாய முடியாது. வேந்தர் பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/10&oldid=1638495" இலிருந்து மீள்விக்கப்பட்டது