உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பவழ

புதிய மார்க்கத்தை ஆதரித்து வந்ததால் சனாதன மார்க்கம் சாகசத்தால் மட்டுமே சாகாது தப்ப முடியும் என்ற நிலை. ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு வந்தது மக்களிடையே. அதாவது போகப்போக்கியங்களிலே ஒரு வகைச் சலிப்பு. கொஞ்சம் வெறுப்பு. புத்தரின் வாழ்க்கை வரலாற்றினை, பிட்க்ஷுக்கள் கூறிடக்கேட்டு நெஞ்சு நெகிழ்ந்த மக்களுக்குச், சுகம் சுகம் என்று அலைவது கானல்நீர் வேட்டை என்ற எண்ணம் ஏற்பட்டது. போக போக்கியத்திலே பலன் இல்லை என்ற எண்ணம், வேறு ஒரு எண்ணத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. ஏன், சிலர் போக போக்கியத்திலே புரள வேண்டும்? ஏன் பல மக்கள் கஷ்டத்தில் உழல வேண்டும்? மக்களை இந்த நிலையில் வைத்திருப்பது கொடுமை அல்லவா? இந்தக் கொடுமையைச் செய்து சிலர் கொள்ளைப் பணத்தைக் குவித்துக் கொண்டு, கோபுரம் அமைத்த மாளிகையும், தடாகம் உள்ள தோட்டமும் அமைத்துக் கொண்டு வாழுவானேன். முத்து, பவளம், வைரம், வைடூரியம், பட்டு முதலியவற்றை, நாட்டுக்கு நாடு எடுத்துச் சென்று விற்பதும், உள் நாட்டிலேயே பொருள்களை, ஒன்றுக்குப் பத்தாக விற்பதும், ஏழைகள் தலையிலே தாங்க முடியாத சுமையை ஏற்றுவதும் கொடுமை. பாடுபடும் மக்களைப் பராரியாக்கிவிட்டு, ஒரு சிறு கூட்டம் மட்டும் பல்லக்குப் பரிவாரத்துடன் வாழ்வது, அக்ரமமல்லவா, என்ற எண்ணம் தோன்றி, மக்கள் மன்றம், என்ற ஒர் சபை அமைத்தனர் மரத்தடியில் தோன்றி, சாவடியில் குடி ஏறி, பிறகு ஒரு அழகிய மாடி வீட்டிலேயே, நடைபெற ஆரம்பித்தது, மக்கள் மன்றத்தின் கூட்டம்

மருதவல்லி, அகவல் அம்பலவாணக் கவியின் அழகு மகள். வணிகருக்கு வாழ்க்கைப் பட்டவள். அம்பலவாணரின், கவிதைகளிலே, சமூகத்திலே ஏழைகள் படும்பாடுகளே, சுருத்தாக இருக்கும். எனவே, மருதவல்லியின் மனதிலே, மக்கள் மன்றத்தார் பேசியவைகளின் வித்து ஏற்கனவே ஊன்றப்பட்டிருந்தது. மக்கள் மன்றத்தினர் பேசுப்பேச, அவள் மனதிலே, வித்து முளைவிட்டுச் செடி கொடியாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/11&oldid=1638496" இலிருந்து மீள்விக்கப்பட்டது