உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பவழ

மருதவல்லி மீது நவகோடிக்கு வெறுப்பே பிறந்து விட்டது. வெண்ணிலாவின் மீது ஏற்பட்ட மோகம், அந்த வெறுப்பை அதிகமாக்கி விட்டது. வெண்ணிலா, அரண்மனைப் பணிப்பெண். அலங்காரத்தால் அழகுக் குறைவையும், ஆடல் பாடலால் வஞ்சகத்தையும் மறைத்துக் கொண்டிருந்த மயக்கு மொழியினள்.

நவகோடியாரின் மனைவியாக இனியும் இருத்தல் இயலாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டாள் மருதம். நள்ளிரவுச் சந்திப்புகளும், அவசர அணைப்புகளும் போதாது. மாளிகையிலேயே வெண்ணிலா வந்திருக்க வேண்டும் என்ற அளவுக்கு ஆசைக்கனல் புகுந்து விட்டது நவகோடியார் உள்ளத்தில் எனவே கவிராயருக்கு ஓலை அனுப்பப்பட்டது. மகளைக் கண்டு அறிவுரை கூறி, ஒழுங்காக நடந்து கொள்ளச் சொல், இல்லையேல், உன்னோடு அழைத்துச் செல் என்பதே ஓலையின் கருத்து— வெண்ணிலாவின் வெற்றிகளிலே அதுவும் ஒன்று—அதிக விலை கொடுத்தும் அந்த வெற்றியை அவள் பெறவில்லை, இரண்டொரு 'இச்' சொலிகள் மட்டுமே செலவிட்டாள்.

மக்கள் மன்றத்தின் எதிர்காலமே, மருதவல்லியின் நிலை என்ன ஆகிறது என்பதைப் பொருத்திருந்தது.பொறி பறக்கப் பேசினாள்; அறம் என்றாள், போர் என்றாள், முழக்கத்துக்குக் குறைவில்லை. எனினும், வசதியான மாளிகை வாழ்வை இழக்க நேரிடும் என்று தெரிந்ததும், மருதவல்லி, கொள்கையைக் கட்டிப் பரண்மீது போட்டு விட்டு,சீமாட்டி வாழ்வையே நடத்துகிறாள் என்ற நிலை ஏற்பட்டு விட்டால் மன்றத்திலே திகைப்பு மிகுந்துவிடும், மூடுவிழாதான் பிறகு! மருதவல்லி இதனை நன்கு அறிந்திருந்தாள். மனப்போர் பலமாக, மக்கள் மன்றத்தின் எதிர்காலம், தன் முடிவுடன் இணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். காட்டிக்கொடுக்கும் கயமைக்குணம் அவளிடம் தலை காட்ட மறுத்தது. ஆனால், கணவனைவிட்டு விலகுவது, கொள்கைக்காக என்ற உண்மையை அறியாத மக்கள் கோணல் நடத்தைக்காரியோ என்று சந்தேகித்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/15&oldid=1638500" இலிருந்து மீள்விக்கப்பட்டது