உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

17

டைத் தாக்கச் சதி செய்கிறார்கள் என்று மன்னன் மார்த்தாண்டன் கூறினான்—சட்டம் கொட்டலாயிற்று. மருதவல்லி மகிழ்ந்தாள். அறநெறிப் போதனையில் ஈடுபட்ட மக்கள் மன்றம், ஆதிக்கம் புரியும் அரசனை அச்சமடையச் செய்திருக்கிறது என்பதை எண்ணிப் பெருமகிழ்வு கொண்டாள். இதுகள் கத்திக் காணப்போகும் காரியம் என்ன, இவர்கள் என்ன செய்துவிடமுடியும், என்று இறுமாந்து கிடந்த மன்னன், இவர்களைச் சிறையிலே தள்ளினால் மட்டுமே, அரநாடு தன் ஆதிக்கத்தில் இருக்கும் என்று எண்ணிட வேண்டிய கட்டம் இவ்வளவு விரைவிலே வந்து விட்டதே என்பதை எண்ணிப் பூரிப்பும் பெருமையும் அடைந்தாள். சிறைக்கு மட்டுமல்ல, சித்திரவதைக்கே தயாராக இருக்கிறார்கள் தன் நண்பர்கள் என்பதைக் கண்டறிந்தபோது, மருதவல்லிக்குப் பெருமை ஓங்கி வளர்ந்தது. வெற்றி! வெற்றி! என்று தனக்குள் கூறிக்கொண்டாள். 'பிடி! அடி!என்று மன்னனுடைய போர் வீரர்கள் கொக்கரித்தனர். மருதவல்லியின் செவியிலே, 'வெற்றி! வெற்றி! என்ற சத்தமே கேட்டது.

"உண்மையைக் கூறிவிடு. சதித்திட்டம் என்ன?"

"திட்டம் என்ன என்று கேள்—சதி ஏதும் கிடையாது. மமதை நிறைந்த மன்னன். கபடம் நிறைந்த குரு, இந்த இடுக்கிலே சிக்கிச் சீரழியும் மக்களை அறிவு பெறச் செய்து, விடுவிப்பதே எமது திட்டம்."

"விடுதலைப் போரா! வீராங்கனையே! விழி, வேலாகுமோ! மொழி கணையோ! மன்றமாம்,மன்றம்! நாட்டுக்கும் மதத்துக்கும் நாசம் தேடும் காலிகள் கூடிடும் குகைக்குப் பெயர், மன்றம்!"

"எது அப்பா. காலிகள் கூட்டம்? உத்தமமான கொள்கைக்காக உயிரையும் இழக்கத் துணிந்து, ஊராள்-

பூ-23 2-ப,பு.-2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/18&oldid=1638503" இலிருந்து மீள்விக்கப்பட்டது