உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பவழ

"ஏ! கிழம்! இதென்ன தண்டச் சோற்று மடமாக்கி விட்டிங்க, தண்டாயுதபாணி கோயிலை" அரசனுடைய படையினர், முதியவரைக் கேட்கிறார்கள், மருதவல்லி பதில் கூறுகிறாள்.

"கோயில் கலனாகி விட்டது, யாரும் இப்போது இங்கே வருவதில்லை"

"அதனாலேயே, இதுகளுக்கு வீடு ஆக்கிவிட்டாயா, கோயிலை?"

"வௌவால்கள் தானய்யா இங்கு வட்டமிட்டுக் கொண்டிருந்தன!"

"வாயாடியாச்சே நீ, தெரியுமே தேவாலயத்தை அசுத்தமாக்கினால் என்ன தண்டனை தெரியுமா?"

"அசுத்தமாக்கவில்லையே. இங்கே இருந்த குப்பைக் கூளத்தை நான்தான் கூட்டி எடுத்து அப்புறப்படுத்தினேன்."

"வீண்பேச்சுப் பேசாதே. நாளைக் காலை வருவோம். இடம் காலியாக இருக்கவேணும்—இல்லே...மறுபடியும் கம்பி எண்ணவேண்டியதுதான்!"

மிரட்டிவிட்டு, மேலதிகாரியிடம் கூறச் சென்றார்கள் படையினர். பெருமூச்செறிந்தபடி, மருதவல்லி திகைத்துக் கிடந்த திக்கற்றோரைப் பார்த்துவிட்டு, "இந்தக் கண்றாவிக் காட்சியைக் காண மறுக்கிறார்கள் கருணா மூர்த்திகள்" என்று கூற, முதியவர், "நேரம் ஏது மகளே! தேரும் திருவிழாவும் காணவே காலமெல்லாம் செலவாகிவிடுகிறதே! கை கால் போனதுகளைக் காண நேரம் ஏது! வா, வா இவர்களை அழைத்துக்கொண்டு வேறிடம் போகலாம்" என்றார்.

"வேறு எங்கே அப்பா போவது?" என்று விசாரத்துடன் மருதவல்லி கேட்க, கவிராயர் ஒளி நிரம்பிய கண்களால் அவளைப் பார்த்தபடி, "எங்கே போனார் புத்தபிரான்! காடு, மேடு, எங்கெங்கோ சென்றாரே, அழகான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/27&oldid=1638697" இலிருந்து மீள்விக்கப்பட்டது