உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

27

அரண்மனை அவருக்கென்று இருந்தும், அன்னக்காவடிகள் நாம்— எங்கு போனால் என்ன! வா, மகளே, வா, மரத்தடியெல்லாம் நமது மாளிகைதான்" என்று கூறினார். மருதவல்லி, தந்தையின் கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக்கொண்டு, "என் குருவப்பா, நீங்கள் எனக்கு ஞானக்குரு!" என்று கனிவுடன் கூற்றினாள். பெரியதோர் மரத்தடி புதிய மாளிகையாயிற்று. தொடர்ந்து தொண்டு செய்து வந்தனர்.

வெண்ணிலாவும் தொடர்ந்து தொண்டு செய்துவர வேண்டியிருந்தது—தானப்பன் விட மறுத்தான். துவக்கத்திலே அவளுக்குக் கோபம்தான், நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு அவன் தன்னைக் கொடுமை செய்கிறானே என்பதால். பிறகோ அவளுக்கு அது பழகியும்விட்டது, பலனும் கிடைக்கலாயிற்று. சந்தேகம் கிளம்பிற்று. நவகோடிக்கு, கேட்கும் துணிவு எழவில்லை, துணிவு எழக்காலம் பிடித்தது. ஆனால் அதற்குள் வெண்ணிலா வேங்கையாகி விட்டாள்.

"எல்லாம் உனக்கு ஆபத்து வராமல் தடுக்கத்தான்" என்று நவகோடியிடம் கூறியனாள். "என்னால் அந்தக் கிழத்தின் தொல்லையைச் சகித்துக்கொள்ள முடியாது" என்று தானப்பனிடம் கூறினாள். தானப்பன் சீமானாகிவிட்டது, வெண்ணிலாவுக்குத் தெரியுமல்லவா!

தானப்பன், அடிக்கடி மிரட்டலானான் சீமானை. சீமானோ வேகமாகச் சாமான்யராகிக் கொண்டு வந்தார்! இந்நிலையில், வெண்ணிலா தானப்பன் அமைத்துக் கொடுத்த புதிய மாளிகைக்கே சென்றுவிட்டாள். விசாரம் நவகோடிக்கு. ஆத்திரம்தான், ஆனால், என்ன செய்வது!

தானப்பன் புதிய வெடிகுண்டு வீசினான்.

"அடிக்கடி மன்னர் கேட்கிறார், உம்மைப்பற்றி. நான் பல தடவை சமாதானம் சொல்லிப் பார்த்தாகிவிட்டது எப்படியாவது மருதத்தைப் பழைய மார்க்கத்துக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/28&oldid=1638698" இலிருந்து மீள்விக்கப்பட்டது