உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஸ்பம்

29

என்பது தானப்பனின் எண்ணம். எனவே தேளானான். நவகோடி துடியாய் துடித்தார். மரத்தடி மடாலயம் விரிவடைந்தது—பொறுப்பும் பாரமும் வளர்ந்தது, தந்தையும் மகளும் தளராது உழைத்து வந்தனர், தோழர்கள் பலர் துணை நின்றனர். புத்த மதம் பரவியிருந்த மண்டலங்கள் சிலவற்றிலிருந்து உதவி அவ்வப்போது கிடைத்து வந்தது—உதவியைக் கடுகளவினதாக்கும் வகையில், வேறு மண்டலங்களிலே, புராதன மார்க்கத்தால் கொடுமைப்படுத்தப்பட்டுப் புகலிடம் தேடி வந்தவர்களின் தொகை பெருகிற்று. தொகை பெருகுகிறபோது, கடும் நோயும் படை எடுத்தது, மருத்துவரின் முயற்சி போதுமானப்பலன் அளிக்கவில்லை. இருமல், காசம், இளைப்பு ஈளைகட்டி, இழுப்பு இப்படிப்பட்ட பல நோய்கள். பவழபஸ்பம் தயாரித்துத் தந்தால், கடும் நோயைக் களையலாம் என்றார் மருத்துவர். உயர்தரப் பவழமோ விலை அதிகம் மருதவல்லியைச் சுற்றிலுமோ அன்னக்காவடிகள்.

மருத்துவர், கிடைத்த மூலிகைகளைத் தருவார், பிறகு ஆயாசமடைவார். பவழபஸ்பம் செய்தால் நல்லது என்று பன்னிப்பன்னிக் கூறுவார். மருதவல்லி, நிலைமை கஷ்டமானதாகி வருவது கண்டு வருந்தினாள். அதேபோது, தானப்பனால் தாக்கப்பட்ட நவகோடியாரின் நிலைமையும் அவளுக்குத் தெரியவந்தது. பரிதாபப்பட்டாள்.

"படமெடுத்தாடும் பாம்பாகிவிட்டான் தானப்பன். பழைய மார்க்கத்துக்கு நீ திரும்பியாக வேண்டுமாம். இல்லையானால் என்மீது பழி தீர்த்துக்கொள்வானாம். என்ன செய்வேன் மருதவல்லி! அவனுடைய பேராசைப் பசியைப் போக்கப் பெரும்பணம் தொவைத்தேன். அதே முறையில் நீண்ட காலம் செய்து வரவும் முடியாது. என்னைக் காப்பாற்றும் பொறுப்பு உன்னுடையதுதான். நீ, புதிய மார்க்கத்தவளாக இருக்குமட்டும் எனக்கு ஆபத்துதான்" என்று புலம்பலானார் நவகோடியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/30&oldid=1638747" இலிருந்து மீள்விக்கப்பட்டது