உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பவழ

"வேறு நாடு சென்று விடுவோமா?" என்று யோசனை கூறிய மருதவல்லிக்கு அவர் கூறின பதிலெல்லாம், "இங்கே உள்ள என் நிலபுலம் தோட்டம், தோப்பு, வியாபாரம் இவை என்ன ஆவது?" என்பதுதான்.

பவழபஸ்பத்துக்கு வழி என்ன என்று கண்டுபிடிப்பதா, இந்தப் பரிதாபத்துக்குரியவரின் ஆபத்தைத் தடுக்க என்ன வழி என்று கண்டறிவதா, என்ன செய்வாள் மருதவல்லி.

நோயாளிகள் மரணப்படுக்கையில் — மருத்துவர்கள் நிலைமையை எடுத்துக் கூறியபடி—நவகோடியார், தனக்கு வர இருக்கும் ஆபத்தை எடுத்துக் கூறியபடி, மருதவல்லியின் மனதிலே கடும்போர் மூண்டது. தானப்பன் நாள் குறித்துவிட்டான், நவகோடியார் மருதவல்லியின் காலில் வீழ்வது தான் பாக்கி—மற்ற அளவு தீர்ந்துவிட்டது.

மருதவல்லி மாளிகை திரும்பினாள்—மரத்தடியினர் திடுக்கிட்டனர்—தானப்பன் கூட திகைத்துப் போனான்—நவகோடியார் களிப்புக்கூத்தாடினார். மருதவல்லி புதிய மார்க்கத்தவரைவிட்டுப் பிரிந்துவிட்டாளாம், பழைய மார்க்கத்தில் சேர்ந்து கொண்டாளாம் என்று ஊரார் பேசிக் கொள்ளலாயினர். சிலர் கேட்கவே செய்தனர்; மருதவல்லி புன்னகை புரிந்தாள், வேறுபதில் இல்லை, கவிராயர் கண்ணீர் சொரிந்தார்—மகளைப் போய்ப் பார்க்கவும் அவருக்கு மனம் இல்லை.

"பேதைப் பெண்! அவ்வளவுதான் அவளால் முடிந்தது!" என்று முணுமுணுத்துக் கொண்டார்.

புதிய மார்க்கத்தைப் பொசுக்கிட அரசன் கடுமையான முறைகளைக் கையாண்டும், கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் புது மார்க்கத்தினர் முன்வருவதுகண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/31&oldid=1638760" இலிருந்து மீள்விக்கப்பட்டது