உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பவழ

அரசனுடைய தயவு நமக்கு இருந்தும், மக்களுடைய எதிர்ப்பு வளருவதுகண்டு, பூஜாரிக் கூட்டம் கோபமும் வருத்தமும் கொண்டது. மக்களை, 'ராஜபக்தி—பழைய மார்க்க பக்தி' கொண்டோராக்குவதற்கான வழியிலே, தளராது உழைத்து வந்தனர்.

பழைய மார்க்கத்திலே ஓரளவு பற்று வைத்துக் கொண்டிருப்போரிலே சிலருங்கூட, மன்னனுடைய ஆட்சி முறையிலே காணக்கிடக்கும் கேடுகளை ஒழித்திட வேண்டு மென்பதிலே ஆர்வம் காட்டினர்.

மன்னராட்சியை ஆதரித்தவர்களிலே சிலர், மக்களுடைய எதிர்ப்புணர்ச்சிக்குக் காரணமே, பழைய மார்க்கத்தைத் தமது சுயநலத்துக்குப் பயன் படுத்தும் பூஜாரிக் கூட்டத்தின் புரட்டுத்தான் என்று எடுத்துரைத்தனர்.

இவர்களிடம் வாதாடுவதே, பூஜாரிக் கூட்டத்தினருக்குக் கடினமானதாக இருந்தது.

"அரசன் ஆண்டவனின் அம்சம்! ராஜனாவது, என்றால், பூர்வபுண்யவசந்தான் காரணம்.”

“அரசன் அக்ரமம் புரிந்தால்? நாட்டுக்குக் கேடு தான், மக்களுக்கும் கேடுதான்...."

"அப்படிப்பட்ட ஆட்சியை எதிர்த்து ஒழிக்கும் கடமை மக்களுடையதல்லவா...."

"சிவ! சிவ! அரசனை எதிர்ப்பதா? யார் மக்களா? ஆட்சி முறையை மாற்றுவதா! மக்களா? மக்களுக்கு ஏது அந்த உரிமை? எப்படி முடியும் மக்களால்? ஆண்டவனுடைய அம்சத்தை அழிக்கக் கிளம்புவது, ஆண்டவனை அவமதிப்பதாகுமே? ஆண்டவன் சும்மா விடுவாரா?"

"மக்கள் மடிகிறார்கள்! அவர்களுடைய சொத்து சூறையாடப்படுகிறது—சுதந்திரம் நசுக்கப்படுகிறது..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/33&oldid=1638771" இலிருந்து மீள்விக்கப்பட்டது